Monday, August 2, 2010

களவாணிகள் கையில் களவாணி டிக்கெட்


களவாணி-படம் வந்து பல நாளாச்சே..எழுத வேண்டிய எல்லாத்தையும் ,எல்லாரும் எழுதிட்டாங்களே...நீ என்னப்பா இப்போ புதுசா எழுதப் போறன்னு,நீங்க கேக்குறதுப் புரியுது.எல்லாரும் படம் பாத்தப் பின்னாடி படம் எப்படி இருந்துச்சுன்னு எழுதிருப்பாங்க..

நான் படம் பாக்குறதுக்கு முன்னாடி நடந்தக் கதையை எழுதிடுறேன்..என் தம்பியும் ஒரு சினிமாகாரன்..அதனால எப்படியோ படத்தப் பத்திக் கேள்விப்பட்டு, மொத நாளே பாத்துட்டு வந்துட்டாங்க..படம் பாத்துட்டு வந்ததுல இருந்து ஒரே களவானி புராணம்..படம் சூப்பர்ப்..சான்சே இல்ல..செம ஸ்கிரிப்ட் அப்படி..இப்படின்னு..

நமக்கும் சில சினிமா நண்பர்கள் இருக்காங்க..மொக்கப் படத்த எதாவது சொல்லி ஏத்தி விட்டு நம்மள பாக்க வச்சிருவாங்க..அப்புறம் பாத்துட்டு வந்து பொலம்பும் போது கலாய்ப்பாங்க...எங்க ஆளுங்க பொழச்சி போகட்டும்னு..யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்னு..

ஓ..அது மாதிரி எதாவது திட்டம் தானோ நம்ம தம்பி பன்றதும்னு நெனச்சிட்டேன்....அப்புறம் நம்ம பதிவுலகம் கொடுத்த செர்டிபிக்கேட் எல்லாம் பாத்து,படம் உடனேப் பாக்கனும்னு தியேட்டர் பக்கம் ஓடுனா..களவானி டிக்கெட்ட நம்ம ஆளுங்க கவுன்ட்டர்ல கொடுக்காம களவாணிகள் கைல கொடுத்து விக்குறாங்க..40ரூபா டிக்கெட் நூறு வாங்கிறான்,50ரூபா டிக்கெட் 120கிறான் பிளாக் ல டிக்கெட் விக்குற களவானி..மக்களும் ஓகேன்னு சொல்லி வாங்கிட்டுப் போறாங்க..நான் அடுத்த வாரம் பாத்துப்போம் ன்னு வந்துட்டேன்..அடுத்த வாரமும் அதே கதை..கடைசியா நானும் களவானி டிக்கெட்ட களவாணிகள் கைல அதிக வெல குடுத்து வாங்கியே பாக்க முடிஞ்சுது....இந்தக் கதையை நான் ஏன் உங்க கிட்ட சொல்றேனா பணம் அதிகமா கொடுத்து பிளாக் ல வாங்குனாலும் பரவாஇல்ல..படத்தப் பாத்துப்புடனும்னு நெனைக்கிறாக நம்ம மக்க..அவ்ளோ நல்லப் படங்க..

ரொம்ப நாள் கழிச்சி வயுறு குலுங்க குலுங்க நான் சிரிச்சி,ரசிச்சி பாத்தப் படங்கோ..நடிப்பு இவங்க,அவங்கன்னு பிரிச்சி சொல்ல முடியல..எல்லாரும் கெளப்பிருக்காங்க பட்டைய..படம் முடிஞ்சி வெளிய வந்தும் ஒரு மணிநேரம் அது உண்டாக்கிய மகிழ்ச்சி குறையல.

களவானி கண்டிப்பா நம்ம மனச களவாடுரப் படம்...

"படத்தோட கிரகம் ரொம்ப நல்லா இருக்கு..ஆணி போய்,ஆடிப் போய்,ஆவணி வந்தாலும் படம் சூப்பரா ஓடும்..வேணாப் பாருங்க வசூல டாப்பா வரும்."



Widget byLabStrike


4 comments:

  1. anna ungala eppadi yallam pesa yaru na solli kudukuranga>?

    ReplyDelete
  2. இது ரசிக்கும் படியாக, மிகவும் நல்லா இருக்கு நண்பா ! ! ! இந்த எழுதுவதற்கு ஒரு திறமை வேண்டும் தான் ! ! உங்களிடம் இருக்கிறது

    ReplyDelete
  3. மிக்க நன்றி தோழி..மீண்டும் வருக!

    ReplyDelete