Monday, July 22, 2013

விபசாரியின் உபசரிப்பு!


சேவல் அடையும்
நேரத்தில்
இவளுக்கான
பொழுது புலர்கிறது.

சூரியனை வீட்டுக்கு
அனுப்பிவிட்டு
இரவுப்பட்சியாய்
பயணிக்கிறது
இவளின் இரவல்
பயணம்.

இருட்டை எதிர்நோக்கி
வாழ் வாதாரத்திற்கான
வெளிச்சத்தை
தேடுகிறாள்.

தன்னந்தனியான
வண்டிகளுக்கும்
தாகம் எடுத்த
ஆண்களுக்கும்
பரிமாற பட்சணங்கள்
தயாராய்..

வகை வகையான
வகையறாக்கள்
இளசில் இருந்து
பெரிசு வரை
பூவை சுவைக்கும்
தேனியாய் இவளடியில்.

வசை பாடுவோரும்
இசை மீட்ப்போரும்
இறுக்கி அணைப்பவரும்
இம்சைக் கொடுப்பவரும்
அவரவர் பசிக்கேற்ப
சூட்டின் தகிப்பில்
ருசிப்பார்த்தவண்ணம்..

இழந்தவனே இழப்பீடு
தருதல் இங்கே
மட்டும்.

இனிக்க இனிக்க
சுவைத்து விட்டு
இப்போது சொல்கிறான்
விபசாரியவள்.

முட்டாள்
தன்னை உபசரித்து
அனுப்பிய
உபசாரியை!


Widget byLabStrike


13 comments:

  1. மிக அருமை... அருமையான வார்த்தை கோர்ப்புகள்...
    விபச்சாரி-உபச்சாரி வித்தியாசமாண சிந்தனை...
    புதுக்கவிதைக்குரிய அத்தனை அம்சமும் கொண்ட நிறைவான கவிதையிது... வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி..மீண்டும் வருக,,,

      Delete
  2. /// இழந்தவனே இழப்பீடு தருதல் இங்கே மட்டும்... ///

    உண்மை வரிகள் பல...

    ReplyDelete
  3. நிறைவான கவிதை...! அழகானதும்,,, விபசாரி-உபசாரி அழகான வார்த்தைக் கோர்வை... பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. unmaiyana varigal..avargalum manithargalthan..unmaiyai sollaponal nalla ullam kondavargal avargalthan..

    ReplyDelete
    Replies
    1. நன்றி...உண்மை நண்பரே..

      Delete
  5. Visit : http://jeevanathigal.blogspot.com/2013/07/21-to-27-07-013.html

    ReplyDelete
    Replies
    1. அறியத் தந்தமைக்கு நன்றி நண்பரே..

      Delete
  6. அன்பின் படைப்பாளீ - கவிதை அருமை அருஅமி - சொற்கள் தேர்ந்தெடுத்துப் போடப்பட்டிருகின்றன - விபசாரி - உபசாரி - சிந்தனை நன்று.

    //இழந்தவனே இழப்பீடு
    தருதல் இங்கே
    மட்டும். // உண்மை நிலை இதுதான்

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  7. /இருட்டை எதிர்நோக்கி
    வாழ் வாதாரத்திற்கான
    வெளிச்சத்தை
    தேடுகிறாள்./

    நெஞ்சை தைக்கும் வார்த்தைகள்....

    /இழந்தவனே இழப்பீடு
    தருதல் இங்கே
    மட்டும்./

    இன்னும் சொல்ல போனால், இழப்பீடு கொடுத்த பிறகு தான் இழக்கிறான் தன்னையே ...



    ReplyDelete