Wednesday, July 24, 2013

கலியுக சீதைகள்!


பட்டாய் பறக்கிறது

சிட்டு

பைக்கில்..

முகம் தெரியாதபடி

துப்பட்டாவை

போர்வையாய்

போர்த்திக்கொண்டு.

இறுக அணைத்தபடி

இளைஞனை!

--000--

அருகாமை

வாகனத்தில்

கணவனோ

தந்தையோ

தம்பியோ

தங்கையோ

அண்ணனோ

யாரறிவார்

அவள் முகமூடி

அவதாரத்தை!

--000--

அலைபேசியில்

பதியப்பட்டிருக்கிறது

அழகாய்..

பெண் பெயரில்

அவன் பெயர்.

அவள் அழைப்பினில் கூட

அவன் ஏனோ

அவளாகிப்போகிறான்.

--000--

அவள் போட்டிருக்கும்

டி சர்ட்டில்

வாசகம் சொல்கிறது

IM BITCH (நான் நடத்தை கெட்டவள்)

நவநாகரீக மங்கையவள்!

--000--

தாலிக் கட்டிக் கொண்டு

வேலித் தாண்டியவளின்

வார்த்தை

காஸ்மோ கல்ச்சர்

கவலை வேண்டாம்

இதெல்லாம் சகஜம்

காலம் மாறிடுத்து!


Widget byLabStrike


4 comments:

  1. பெண்களின் பக்கம் மட்டும் பார்த்துப் பேசாதீர்கள் கலியுக ராமன்கள் குறித்தும் பேசுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. அவ்வளவுதானே தோழி..கலியுக ராமன்கள் குறித்து எழுதிவிட்டால் போச்சு :)

      Delete