Wednesday, September 11, 2013

இரண்டாம் யுத்தம் !



அப்படி ஓர் காலை கடந்த

பொழுதில்

என்னை அழைப்பாய்

என்று நான்

எதிர்பார்த்திருக்கவில்லை!

எதிர்ப்பார்ப்புகள் அற்றவனாய்

உன்னருகில் வருகிறேன்!


பயத்தில்

சற்று வியர்வை வழிந்த

முகத்துடன்தான்

உன்னிடத்தில் விழிக்கிறேன்!


என்னை வீழ்த்தும்

ஆயுதம் தரித்த

உடையற்ற உடலில்

களமாடிட காத்திருக்கிறாய் நீ!


நிராயுதபாணியாய் நிற்பவனை

எதிர்பாராத நேரத்தில்

வெறிகொண்டு தாக்குகிறாய்!


வீழ்ந்து கிடக்கும்

தருணத்தில் எமை எழுப்பி

வெற்றி இருவருக்குமானது என்கிறாய்!


எதிர் எதிர் துருவத்தில் நின்று

போரிட்டது ஏனென்று அறியாமல்

மீண்டும் தயாராகிறோம்

இரண்டாம் யுத்தத்துக்கு !


Widget byLabStrike


1 comment:

  1. உன்னிடத்தில் விழிக்கிறேன்...

    தொடரட்டும் யுத்தம்...

    ReplyDelete