Saturday, August 10, 2013

பூக்களுக்குள் மறைந்திருக்கிறது பூகம்பம்!



புன்னகைக்குள் மறைந்திருக்கும்

பூகம்பத்தை

அறிந்து பழகு!

பூக்களுக்குள் மறைந்திருக்கும்

வன்முறையை

புரிந்து செல்!

மான் தோல் போர்த்தியது

வெறி நாயாகவும்

இருக்கலாம்!

தென்றல் என்றெண்ணி

தீண்டாதே

புயல் உள்ளே இருக்கிறது!

தீபம் பார்த்து

தொட்டு கும்பிடுகிறாய்

உன்னை பற்றபோகும் தீ என அறியாமல்!

நண்பன் என்றெண்ணி

நம்பிடாதே

எதிரியின் குணம் என்னென்று அறி!

அறிவை கையில் எடு

ஆயுதத்தை விடவும்

வேகம் மிக்கது விவேகம் !


Widget byLabStrike


6 comments:

  1. கொஞ்சம் முன்எச்சரிக்கையுடம் இருப்பது முக்கியம்தான் அதற்காக எல்லாவற்றையுமே எதிர்மறை எண்ணத்துடனேயே பார்த்தால் எதையுமே செய்ய முடியாதே...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்..எல்லோரையும் பார்க்க முடியாது பார்க்கவும் கூடாது..துரோகிகளிடம் எச்சரிக்கைத் தேவை..நன்றி..

      Delete
  2. கால நேரம் அறிந்தால்
    தென்றல் புயலாகுவதை அறியலாம்

    ஆம்
    விவேகம் வேண்டும் அறிய

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக தோழரே...நன்றி..

      Delete
  3. தாழம்பூவுள் பாம்பு என்பார்களே. விவேகம் வேண்டும்என்பதை உணர்த்திவிட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி..மீண்டும் வருக..

      Delete