Wednesday, December 11, 2013

மகாகவியே மீண்டும் நீ வர வேண்டும்!



முன்டாசுத் தலையும்

நெற்றியின்பாலிட்ட திலகமும்

முறுக்கி விட்ட மீசையும்

தீண்டாமை சாடிய தீர்க்க சிந்தையும்

பெண்மையை நிமிர்த்திய பேராண்மையும்

அந்நியனை அஞ்சவைத்த எழுத்தும்

தரணியில் யார்க்கும் அஞ்சா நெஞ்சமும்

தமிழின்பால் நீ கொண்ட வேட்கையும்

மகாக்கவியாய் உன்னை மட்டுமே

மகுடத்தில் ஏற்றி வைக்கிறது!

உன்னைப்போல் ஒருவன்

இன்றில்லாததால் தான்-தமிழர்

இப்போ தறிக்கெட்டு அலைகின்றார்!

சாதிக்கொரு சங்கம் வைத்து

தமிழ் சங்கம் வைத்த மண்ணை

சாக்கடை ஆக்குகின்றார்!

தன்னிலை மறந்து

கிளப்பிலும்,மப்பிலும்

கிளர்ச்சியுற்று கிடக்கின்றார்!

அந்நியமொழி மோகத்திலே

அதன்பால் கொண்ட ஈர்ப்பிலே

தம்மொழி மறக்கின்றார்!

கொலவெறியும்,குத்துப்பாட்டும்

தமிழ்வளர்க்கும் மொழிப்பாட்டென

தரணியெங்கும் முழங்குகின்றார்!

புதுமைப்பெண் மட்டுமல்ல

நாங்கள் புரட்சிப்பெண் என்று சொல்லி

நாளொருவனுக்கு படுக்கை பகிர்கின்றார்!

ஆணுக்கு பெண் நிகரெனக் கொள்வாம்

வா மதுவும்,மயக்கமும்

ஒன்றாய் பெறுவோம் என சமத்துவம் பேசுகின்றாள் !

ஆடை அவிழ்த்து ஆடிக்கொண்டு

அடுத்த தலைமுறை என சொல்லி

நாகரிகத்தின் பெயர் சொல்வார்!

மீண்டும் பிறப்பாயோ இம்மண்ணில்

எங்கள் பாரதியே

இந்த சமுதாயத்தை மாற்றி

சவுக்கடி கொடுக்கவே!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று மாகாகவி பாரதியின் பிறந்தநாள்..இந்நாளில் அவரப் போற்றுவோமாக!வாழ்க பாரதி!!வளர்க அவர் புகழ்!!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



Widget byLabStrike


4 comments:

  1. சுதந்திர தாகத்தையும், வீர உணர்வையும் வடித்தெடுத்த பாரதியின் நினைவுகளை கவிதையாய், பாடல்களாய் படித்தாலும் நாடு இன்றைய சூழலில் எத்தகைய தாக்கத்தோடு உள்ளது என்பதை படைப்பாளியின் கவி வரிகளில் புலனாகிறது....சூர்யா

    ReplyDelete
  2. சவுக்கடி வரிகள்... படமும் அருமை... பாராட்டுக்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வணக்கம்
    கவிதையின் வரிகள் அருமை வாழத்துக்கள்
    எனது புதிய தளத்தின் ஊடாக கருத்து இடுகிறேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. கடைசி வரிகள் அருமை...தமிழ்த்தாயின் பாசப்பிள்ளை பாரதி மீண்டும் வேண்டும்தான்...

    ReplyDelete