Monday, July 29, 2013

பாற்கடல் ஆன மகிமை!



மீண்டும் மீண்டும்

அழைக்கிறது உன் கண்கள்

மீன் பிடிக்க வாடா என்று!

அழைப்பை ஏற்றவனாய்

அருகாமையில் வருகிறேன்!

புழு கோர்த்து மீன் பிடிப்பது

எவ்வாறென,என் உதடுகளுக்கு

சொல்லி தருகிறாய்!

ஏரி எங்கே இருக்கிறது என

உன் இதழ்களிடம்

வினவுகிறேன்!

கொஞ்சம் இறங்கி பார்

இரண்டு முகடிருக்கும்

முகட்டில் ஏறி நின்று

ஏரியை தேடு

அருகாமையில் குளமிருக்கும்

அதுதாண்டி ஏரி என்கிறாய்!

தேடலின் முடிவில்

தென்படுகிறது

கருவேல் மரங்கள்

நிறைந்த காட்டு ஏரி!

ஏரியடைந்து பார்க்கிறேன்

நான் இடுப்பில் செருகி வந்த

தூண்டில்

எழுச்சி கண்டிருக்கிறது!

தூண்டிலை விட்டு

துழாவுகிறேன்

ஆழமான இடம் தேடியும்

அகப்படவில்லை மீனேதும்!

என்ன ஆச்சர்யம்

நீ ஏரி என்று

காட்டிய இடம்

அமிர்தம் சுரந்து

பாற்கடல் ஆகியிருக்கிறது!


Widget byLabStrike


2 comments: