Monday, September 23, 2013

THE DIRTY PICTURE – DIRTY இல்லை!



THE DIRTY PICTURE -படம் ஆரம்பித்தக் காலந்தொட்டே பெரிய எதிர்ப்பார்ப்பை எகிற வைத்திருந்த படம்..சில்க் வாழ்க்கை வரலாறு என்றதுமே வடநாட்டையும்,தமிழ்நாட்டையும் ஒரு சூடு சூழ்ந்திருந்தது..அதற்கேற்ப அவ்வப்போது வருகிற செய்திகளும்,வித்யா பாலனின் புகைப்படங்களும் வெயில் காலத்து அனலை குளிர் காலத்தில் கொடுத்துக் கொண்டிருந்தன..



சில்க் வாழ்க்கை வரலாறை திரைக்காவியமாக்கியிருப்பதாக சொல்கிறார்கள்..எந்த அளவுக்கு உண்மை பொய் திரைக்கதையில் கலந்திருக்கிறது என்பது தெரியவில்லை..ஆனால் ஒரு நடிகையின் வாழ்க்கையில் அவள் சந்திக்கும் வெற்றி,தோல்வி,இன்னல்,இடையூறுகள்,புகழ்,பணம்,ஏமாற்றம்,எதிர்பார்ப்பு என எல்லாத் தளங்களிலும் பயணிக்கிறது படம்..சாதாரணப் பெண்ணாக வாய்ப்பைதேடி அலைந்து,வாய்ப்பை பிடித்து,புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகனுக்கு படுக்கையை பகிர்ந்து,வளர்ந்து,புகழின் உயரத்தை அடைந்து,பலரால் ஏமாற்றப்பட்டு,மன அழுத்தத்தில்,விரக்தியின் உச்சத்தில் உயிரை விடுகிற ஒரு பெண்ணின் கதை..நாம் செய்தி ஊடகங்களின் வாயிலாக அன்றைய காலக்கட்டத்தில் அறிந்தவரை இத்தனை தளத்திலும் சில்க் வாழ்க்கை பயணப்பட்டதை அறியாமலில்லை..



வித்யா பாலன் நடிப்பில் சில்க் வாழ்கையை கண்முன் நிறுத்துகிறார்..ஒவ்வொரு பரிமாணத்திலும் பளிச்சிடுகிறார்..வித்யா தாராள கவர்ச்சி காட்டி இருந்தாலும், சில்க்கை ஒப்பிட்டு பார்க்க முடியல..சில்க்..போதை நிரம்பிய விழிகள்..செதுக்கிய உடல்..ஹ்ம்ம்..சொல்லும்போதே ஜிவ்வுங்கிது..சில்க் சில்க் தான்..மத்ததெல்லாம் சிந்தட்டிக் தான்!



நஸ்ருதீன் ஷா நச்சின்னு பண்ணிருக்கார்..எல்லா கேரக்டர்களும் அருமை..படம் சொல்ல வந்த கதையை தெளிவாய் சொல்கிறது..படம் முடிந்து வெளிவரும்போது ஒரு பாரம் நெஞ்சை இறுக்குகிறது ..ஒரு அமைதி நிலவுகிறது.கவர்சிக்கன்னியின் கடைசிக்காலம் கண்ணீரில் நனைகிறது!
நல்லப்படம் ..THE  DIRTY PICTURE - DIRTY இல்லை..

(சில்க் ஸ்மிதா நினவு நாளின்று..அவரின் நினைவை போற்றும் வகையில் மீள்பதிவு செய்திருக்கிறேன்)



Widget byLabStrike


No comments:

Post a Comment