Saturday, January 21, 2012

கிளிகளும் சிலநேரம் ஊமையாகின்றன!



பார் முழுக்க பறந்து

சிறகடித்த  பச்சைக்கிளி அது!

கீ..கீ..என்றாலும்

கிறங்கடிக்கும் குரல்!

சுதந்திரக்காற்று சுவாசித்தக் கிளியை

கூட்டுக்கிளியாக்கி

குரல்வளம் கற்ப்பித்தேன்!

பச்சைக்கிளி நாவின் மீதில்

பச்சை மிளகாய் தடவி

பாட்டன் வைத்தியம் செய்து பார்த்தேன்!

கடைசிவரை பேசவில்லை

என் கையில் அகப்பட்ட பருவக் கிளியும்!

தன் காதல் பிரிந்(௦த்)த ஏக்கத்தில்

கண்ணீர் சொரிந்து ஊமையானதோ

சிறகொடிக்கப்பட்ட என் சிறைக்கிளி!


Widget byLabStrike


No comments:

Post a Comment