Wednesday, August 14, 2013

கனவுகளில் தொலைந்த கவிதை!



கனவில் லயித்து

கவிஞனாகி இருந்தேன்!

கற்பனை ஊற்றெடுத்து

காட்டாற்று வெள்ளமென

கட்டுக்கடங்கா

வார்த்தை பெருக்கெடுத்து

பெருங்கடலாய் வியாபித்திருந்தது

கவிதைகளால் ஆன பெருங்கனவு!

எண்ணங்களை சேர்க்க

எழுத்துகளை கோர்க்க எண்ணி

எழுந்து எடுக்கிறேன்

எழுதுகோலை!

கனவுகளில் தொலைந்த

கவிதை

நினைவில் பிடிபடவில்லை!


Widget byLabStrike


3 comments:

  1. எப்போதுமே அப்படித்தான், கனவின் கவிதை கைகளுக்கு வருவதில்லை...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் உண்மைதான் நண்பரே..

      Delete