Sunday, January 29, 2012

முத்துக்குமரனுக்கு வீரவணக்கம்!



அன்று இதே நாளில்தான்

எல்லோருக்கும்

வந்து சேர்ந்தது சோகம் சுமந்த அந்த செய்தி!

சாஸ்திரிபவனில்

ஒரு சரித்திரபுருசன்

தீபமாகி இருக்கிறானென்று!

புரட்சித்தீயை

தன் உடலில் ஏற்றி

புரண்டான் தமிழர் துயர் களைய என்று!

தீயில் அவன் கறுத்த போதும்

கருத்துசெறிவுள்ள கடிதத்தை

அனைவர்க்கும் விநியோகித்திருந்தான் என்று!

இம்மண்ணுக்கான மைந்தன்

உணர்வின் எழுச்சி

தானுறங்கி தமிழர் துயில் களைந்தானென்று!

இந்நாளிலாவது ஒன்றுபட்டு உறுதியேற்போம்

உன் கனவை நிச்சயம்

நாங்கள் நினைவாக்குவோம் என்று!

புரட்சி தீபம் முத்துக்குமரனுக்கு வீரவணக்கம்!

Widget byLabStrike


2 comments: