Monday, November 18, 2013

முப்பாலும் கலந்து உன் முலைப்பாலில்!



ஈரடி எழுதிய குறளைவிடவும்

உன் இரு விழிப்பார்வையில்

ஆயிரம் அர்த்தம்

வள்ளுவனையும் விஞ்சி

என்னை வரவழைக்கிறது உம்மிடத்தில்!

அறத்துப்பாலில் ஆரம்பித்தோம்

பொருட்பாலில் புகுந்தோம்

காமத்துப்பாலில் கலந்தோம்

முப்பாலும் கலந்து உன் முலையில்

ஊறியிருக்கிறது தமிழ்ப்பால்!

பசிக்கு அழும் குழந்தை

மா..அம்மா என்று ஆதிமொழி

பேசி அழும் போதெல்லாம்

தமிழமுது மீண்டும் மீண்டும்

பிறக்கிறது,சுரக்கிறது

தமிழே தரணியின் முதல் மொழி

என்ற அடையாளம்  சொல்லி !


Widget byLabStrike


3 comments:

  1. நல்ல கவிதை ! நன்றி நண்பரே!

    ReplyDelete
  2. அருமையாக இருக்கிறது......

    ReplyDelete