Friday, November 8, 2013

கா(லம்)ர்பன் கற்ப்பித்த பாடம்!



காடுகள் அழிக்கப்பட்டு

கான்கிரீட் கட்டிடமாய் கிளைபரப்பிய மரங்கள்!

வீட்டிற்கோர் மரம் வேண்டாம்

வீடுமுழுக்க நிரம்பி இருக்கின்றன பிளாஸ்டிக் மரங்கள்!

மூடிய ஜன்னல் திறக்கப் படுவதே இல்லை

அடைப்பட்ட இடத்தில் குளிர்விப்பான் காற்று!

வீடுவிட்டு வெளிவந்து கதைக்க நேரமில்லை

தொலைகாட்சியிலேயே தொலைகிறது நேரம்!

அவசரத் தேவைக்கு அழைக்ககூட பயம்

பக்கத்து வீட்டுக்காரன் கூட திருடனாய் தெரிகிறான்!

மேற்கூரையில் விண்மீன்,நிலவின் படம் ஒட்டி

பாப்பாவுக்கு ஊட்டுகிறாள் நிலாச்சோறு!

டாடி,மம்மி அழைப்புகளுக்கு இடையில்

அடிப்பட்டு விழுந்தால்மட்டும் ஐயோ அம்மா!

ஆக்சிஜன் சுவாசித்து வாழ்ந்த மனிதன்

கார்பன் சுவாசித்தும் கற்றுகொண்டான் வாழ!


Widget byLabStrike


1 comment:

  1. கார்பனிலிருந்தே ஆக்சிஜன் எடுக்கும் காலம் வரலாம்...

    ReplyDelete