Friday, March 30, 2012

கிரிப்பித்-உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (பாகம்-1)



உலக சினிமாவின் இலக்கணமாக அறியப்பட்ட மாமேதை D.W.கிரிப்பித் ஜனவரி 22, 1875 ஆம் ஆண்டு ஜேக்கப் கிரிப்பித்துக்கும்,மேரி பெர்கின்ஸ் கிரிப்பித்துக்கும் இளையமகனாக பிறந்தார்.தந்தை ஜேக்கப் கிரிப்பித் அமெரிக்க ராணுவத்தில் உயரதிகாரியாக பணியாற்றியவர்.ஆதலால் அந்நாளில் செழுமை மிக்க குடும்பமாய் கிரிப்பித் குடும்பம் இருந்தது,சீரும் சிறப்புமாக அவரும் வளர்ந்தார்.பின் கிரிப்பித் தன் சகோதரி மாட்டி அரவணைப்பில் கல்வி பயணத்தை தொடர,அவனது 7 ஆம் வயதில் இழக்க கூடாத இழப்பாக வந்து சேர்ந்தது தந்தையின் இறப்பு.அதன்பின் செழிப்பு மிக்க வீடு வறட்சி கண்டது.தாளாத வறுமை அவர்களை துரத்தியது.



அப்போ கிரிப்பித்துக்கு 14 வயது,லூயிஸ்வில்லி எனும் கிராமத்திற்கு வறுமைக் காரணமாக குடும்பத்தோடு குடிபெயரும் சூழல்.அங்கு விருந்தினர் தங்கும் விடுதி ஒன்றை ஆரம்பித்து பெரும் நஷ்டத்திற்கு ஆளாகிறது கிரிப்பித் குடும்பம்.இந்நிலையில்தான் வேலைக்கு செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு துணிக்கடை,புத்தகக்கடை என பல கடைகளில் கூலித் தொழிலாளியாக வேலைப்பார்க்கிறார் கிரிப்பித்.



தன் வாழ்க்கை இப்படியே போய்விடக்கூடாது, தான் சாதிக்கப்பிறந்தவன் என்கிற எண்ணம் மட்டும் அவருள் ஓடிக்கொண்டே இருக்கிறது.சமயம் கிடைக்கிற போதெல்லாம் நாடக கதை எழுதி பல நாடக கம்பெனிகளை நாடலானார்.அவர் இயக்கிய நாடகங்கள் அனைத்தும் 1907 ஆம் ஆண்டுகளில் வெற்றிமுகமாய் வீறுநடை போட,1908 ஆம் ஆண்டுகளில் பல நாடக நிறுவனங்கள் கிரிப்பித்துக்கு சிவப்பு கம்பளம் விரித்தன.அந்நிறுவங்களின் துணையோடு நடிப்பையும் வெளிப்படுத்தலானார்.

சினிமாவில் சிகரம் தொடுவார் கிரிப்பித்..


(அடுத்த  வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள் )


முந்தைய பதிவைப் படிக்க..


சாப்ளின்-உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (பாகம்-6)




Widget byLabStrike


1 comment:

  1. தொடருங்கள் வெற்றிகரமாக

    ReplyDelete