Monday, March 26, 2012

நண்பனை கொல்லாதே!



விவசாயிகளின் நண்பனென்றாய்

விஷம் தெளித்து

என்னுயிரை விலை பேசுகிறாய்!

மண்ணைப் பண்படுத்தினேன்

மருந்தடித்து

என்னைப் புண்படுத்துகிறாய்!

இயற்கை உரத்தை இழந்துவிட்டாய்

செயற்கை உரம் போட்டு

செத்துவிட்டோம் மண்புழுவாகிய நானும் மண்ணும்!

பயிர்  வளரவில்லை என்று

காலம் சென்று

கவலைகொண்டு என்ன பயன்?

Widget byLabStrike


2 comments: