Friday, April 20, 2012

கிரிப்பித்-உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (பாகம்-3)



சாப்ளின் மற்றும் சில பிரபலங்களோடு கிரிப்பித் இணைந்து உருவாக்கிய United Artist நிறுவனம் கிரிபித்துக்கு இயக்குனர் பதவியை தக்க வைக்க உதவியதே தவிர அவரை உடனடியாக சிறந்த இயக்குனராக இனங்காட்டவில்லை.அவர் தன்னை சிறந்த இயக்குனராய் முன்னிறுத்த மும்முரமாய் இயங்கினார்.1919 இல் கிரிப்பித் இயக்கிய The Broken Blossom பெற்ற Box Office வெற்றி அவரை உயரத்தில் ஏற்றி வைத்தது.அதன் பின் தொடர்ந்து தயாரித்த Way Down East, Orphan of the Storm படங்கள் வெற்றி பட்டியலில் மீண்டும் மீண்டும் இடம் பிடித்தன.இதனை தொடர்ந்து பல படங்கள் எடுத்து ஓரளவுக்கு வெற்றியும் கண்டார்.

இச்சமயத்தில் வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்த கிரிப்பித் பேசும் படங்கள் தயாரிப்பதை தாம் அடுத்த சவாலாக எடுத்துகொள்ள போவதாக அறிக்கை விடுத்தார்.

ஆனால் அப்படி தயாரித்த Isn't Life Wonderful படம் தோல்வியை தழுவ மீண்டும் இயக்குனராக களம் இறங்கினார் கிரிப்பித்.அதன்பின் வந்தப் படங்களும் பெரிதாக வெற்றியைப் பெறவில்லை.பெரும் சிரமத்திற்கு பின்பு1936 இல் வந்த Intolerance என்ற படம் வெற்றியின் உச்சத்தை எட்டியது.இப்படத்தில் இசைக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது,இன்றளவும் இப்படத்தினை முன்மாதிரியாக வைத்து இயக்கி பல இயக்குனர்கள் பல வெற்றிப்படங்களை தந்திருகின்றனர் .


1939 இல் Hal Roach என்னும் தயாரிப்பாளர் Of Mice and Men, One Million B .C படங்களுக்கு நடிகர் நடிகை தேர்வு,வசனம் மற்றும் இயக்கும் முறை போன்ற விசயங்களில் தனக்கு உதவுமாறு கிரிப்பித்துக்கு கடிதம் எழுதினார்.அவரின் வேண்டுதளுக்கிணங்க தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக்கொண்டு கிரிபித்தும் அவருக்காக இயங்கினார் படம் இயக்கினார்,.


பின்னாளில் academy of motion pictures arts and sciences க்ரிபித்துக்கு சிறப்பு oscar விருதினை வழங்கி கௌரவித்தது.

Charles Chaplin, John Ford, Alfred Hitchcock, Orson Welles போன்ற மிகப்பெரிய இயக்குனர்கள் கிரிப்பித் தங்களது ஆசான் என்றும் கிரிப்பித் என்ற ஒரு மனிதருக்காக தேச வெறியை கூட மறப்போம் என்று பாரட்டி உள்ளனர்.

இவ்வளவு சாதனைகளை புரிந்த அந்த சினிமா புருஷன் 1948 ஜூலை 23 ஆம் தேதி Los Angels இல் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தனிமையில் இறந்து கிடந்தது பெரும் சோகம்.

இவர் மரணத்திற்கு பின்பு 1953 இல் D.W.Griffith என்ற விருது சிறந்த இயக்குநர்களைப் பாராட்டி வழங்க தொடங்கப்பட்டது.1999 இல் இருந்து DGA life time achivement award என்று அதனை பெயர் மாற்றம் செய்து விருது வழங்கி வருகின்றனர். இதைவிட கிரிப்பித் சினிமாவில் செய்த சாதனைக்கு ஆதாரம் தேவையில்லை.சினிமா என்கிற சாதனம் உள்ளவரை கிரிப்பித்தின் சாதனை சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதற்கு வேறு சான்று தேவையில்லை.

அடுத்தவாரம் இந்திய சினிமாவை உலக சினிமாவின் உயரத்தில் உட்கார வைத்த சத்யஜித்ரே..

முந்தைய பதிவைப் படிக்க..


கிரிப்பித்-உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (பாகம்-2)


Widget byLabStrike


1 comment:

  1. மிக்க நன்றி என் வேண்டுகோளுக்கு இணங்கி அடுத்த வாரம் நீங்க சத்யஜித் ரே பத்தி போட வந்ததற்காக

    ReplyDelete