Friday, May 25, 2012

சத்யஜித் ரே-உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (பாகம்-1)


GeneticIinheritance போன்ற ஆங்கில வார்த்தைகள் பரவலாக பல சமய சூழ்நிலைகளில் உபயோகப்  படுத்தப்பட்டு வருவதை பார்த்திருக்கிறோம் ,உணர்ந்திருக்கின்றோம் அல்லது கேட்டிருக்கிறோம்.அவ்வாறு இல்லாமல் உதாரணமாக ஒருவரை காட்டுங்கள் என யாரேனும் கூறினால் நீங்கள் கண்ணைமூடிக்கொண்டு காட்டலாம் அவரை.அவர்தான் இந்திய சினிமாவின் அவதார புருஷனாய்,உலக சினிமாவுக்கு இணையாய் இந்திய சினிமாவை எடுத்து சென்று இமயத்தில் வைத்த  "சத்யஜித்  ரே'. இவர் இசை அமைத்தல், எழுத்து, வண்ணம் தீட்டுதல் என்று பல துறைகளில் சிறந்து விளங்கிய உபேந்திரா கிஷோர் ரே என்பவரின் பேரனும், அதே போன்று கவிதை கட்டுரை போன்றவற்றில் சிறந்து விளங்கிய சுகுமார் ரே என்பவரின் மகனும் ஆவார்.
 
இவர் 1921 ஆம் அன்று கல்கத்தா மாநகரில் பிறந்தார்  சத்யஜித் ரே பிறக்கும் தருவாயில் தந்தை சுகுமார் அந்த காலங்களில் நிலவி வந்த கல -அசர்  என்னும் நோயினால் பீடிக்கப் பட்டிருந்த காரணங்களால்,அவரது தந்தை சத்யஜித் ரே வின் பாட்டனார் உருவாக்கிய 'சந்தேஷ் ' என்னும் சிறுவர் பத்திரிக்கைகு கவிதை கதை போன்றவற்றை எழுதி வந்தார். இக்காரணங்களால் சத்யஜித் ரே விற்கு இயற்கையாகவே அச்சு தொழிலில் நாட்டம் ஏற்பட்டது. 


அத்தோடு இல்லாமல் 'பிரம்மா சமாஜ்  ' என்னும் சங்கத்தை பெரிதும் ஆதரித்தவர்களில்  முதல் இடம் பிடித்த குடும்பம் சத்யஜித் ரேவின் குடும்பம் என்றும் கூறலாம். (அவரது குடும்பத்தில் நிலவிய பல சம்பவங்களும் செய்திகளும் அவரது படங்களில் பிரதிபலித்தது குறிப்பிட தக்க விஷயமாகும்). 
சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்த சத்யஜித் ரே, பாட்டனார் உருவாக்கிய பத்திரிக்கை நிறுவனத்தை விற்ற கையோடு தன் தாயோடு  வேறு  இடத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் உருவானது.  தன் தாய்மாமன் வீட்டில் தஞ்சம் அடைந்த தாயும் சேயும் செய்வது அறியாது  தவித்தனர். அந்த நேரத்தில் நூல் பிண்ன  கற்று கொண்டு வீட்டு  செலவுகளுக்கு தேவைகளுக்கான பணத்தை ஈட்டி வந்தனர்.


தனது 8 வயது வரை தாயின் சீடனாக கல்வி பயின்ற ரே அதன் பின் அரசாங்க பள்ளியில் கல்வியை கற்க தொடங்கினார். படிப்பில் பெரிய  அளவில் நாட்டம் இல்லாதவராக தான் இருந்தார். படிப்பில் நாட்டம் இல்லாமல் போனதற்கு அவர் அயல் நாட்டு படங்கள் மேல் கொண்டிருந்த மோகமும் காரணமாக இருக்கலாம்.அக்காலத்தில் வெளி வந்த  ஹாலிவுட்   பத்திரிகைகளில் உள்ள குறுஞ்செய்தி,புகைப்படங்களை சேகரித்தல் கிராமபோன்  தட்டுகளை வாங்குவது போன்ற செயல்களில் மிகுந்த நாட்டம் கொண்டவராக சத்யஜித் ரே இருந்தார். 

இப்படியாக பள்ளி படிப்பை முடித்த ரே தனது 15 -வது  வயதிலேயே  கல்லூரியில் அறிவியல் பாடத்தில் சேர்ந்தார், கல்லூரி இரண்டு ஆண்டுகள் முடித்த நிலையில் உறவினர் யாரோ ஒருவர் பொருளாதாரம் படிப்பை பயின்றால் வேலை உறுதியாக வாங்கித் தருவதாக வாக்கு  கொடுக்க  ரே வும் மூன்றாம் ஆண்டு பொருளாதாரம் படிப்பில் சேர்ந்தார். இதனால் ஆங்கில இசை, படம் பார்ப்பது  போன்ற அவரது ஆர்வம் கூடி கொண்டே போனது.    

ஒரு கட்டத்தில் படிப்பை துறந்த ரே படம் தயாரிக்க முயன்றார் வயதில் சிறிய பிள்ளை என்ற காரணத்தாலும் அனுபவமின்மை காரணங்களாலும் தனது தாயின் அறிவுறுத்தலின் பெயரில் அவரது வண்ணம் பூசும் (painting ) ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில்  சாந்திநிகேதன்    இல் வரைகலை படிக்கச் சேர்த்தார். அந்த நிறுவனத்தை உருவாக்கிய தாகூர் அவர்கள் ரே வின் தந்தை பாட்டனாரின் நெருங்கிய நண்பரும் ஆவார்.சாந்திநிகேதனில் வரைகலை வண்ணம் தீட்டுதல் சிலை செதுக்குதல் சிறிய வகையிலான ஓவியங்கள் போன்ற பல அம்சங்களை கற்று சிறந்த மாணவனாக ரே பெயர் பெற்றார்.
சத்யஜித் ரே புகழ் வளரும்..
(அடுத்த  வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள் )



Widget byLabStrike


No comments:

Post a Comment