Tuesday, May 29, 2012

நம்ப வைக்கிறது மூளை!


எழுத்துகள் ஆழமாக வேண்டுமென்று
என் எண்ணம் சொல்கிறது
அதன் சொல் கேளாமல்
மேலோட்ட சிந்தைகளை சிதறி
எழுதி முடிக்கிறது கைகள்
ஏனோ தானோவென்று
வார்த்தை சேர்ப்பை கோர்த்து  முடித்து
இதுதான் கவிதை என்று
என்னை ஏமாற்றி
நம்ப வைக்கிறது  என் மூளை!


Widget byLabStrike


1 comment:

  1. மூளையில் தேவையில்லாத சிந்தனைகளெல்லாம் இருந்தால் இப்படித்தான்..

    ReplyDelete