Saturday, June 9, 2012

எம் உலகமாகினாய்!


உன்னிடம் உதை வாங்கியபோதும்
மகிழ்ந்துகொள்கிறேன்
உன் நகக்கீரல் படும் போதெல்லாம்
என் நெஞ்சம் நிறைகிறேன்
நீ கடித்து வைத்த காயத்தை
விழுப்புண் என்கிறேன்
உன் மூத்திரத்தால் என் முகம் நனைய
விழித்து சிரிக்கிறேன்
நீ தந்தை என்ற ஸ்தானம் தந்து
எம் உலகமாகினாய்!








Widget byLabStrike


1 comment:

  1. அருமையான கவிதையும், படமும். காரணம் 3மாதப் பேரனுடன் கொஞ்சுகிறேன். அணு அணுவாக ரசிக்கிறேன். நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete