தாயின் அறிவுறுத்தல்,வற்புறுத்தலின் பேரில் ரே வால் தாகூரின் சாந்தி நிகேதனில்
பயில்வதை மறுக்க முடியவில்லை.படிப்பின் ஒரு பகுதியாக கிராம புறங்களுக்கு
சென்று அங்குள்ள மக்களின் கலாச்சார,புற நாகரீகங்களை , உடை பாவங்களை தன்
காகிதத்தில் வண்ணமாக்கினார்,தன் மனதில் எண்ணமாக்கினார்.( பின்னாளில் தன்
படங்களில் மனதில் நின்ற அக்காட்சிகளை படமாக்கினார்.)
அதே சமயத்தில் பல மாநிலங்கள், நாடு சம்மந்த பட்ட வரைபடங்கள்,
சிறிய அளவில் வரைந்த படங்கள், ஜப்பானிய மர வேலைபாடுகள் போன்றவற்றை மக்கள்
பார்வைக்கும் கொண்டு வந்த ரே தான் சிறுக சிறுக கண்ட, கற்றுக்கொண்ட
விசயங்களை பெரிதளவில் புணர ஆசைக்கொண்டு,இந்தியா முழுதும் தன் மூன்று
நண்பர்களோடு ஆராய விருப்பம் கொண்டு சுற்றினார்.அதன் வாயிலாக வரைகலையின்
சிறப்பு,அதன் தெளிவான நுட்பம் ரேவிடம் முழுமையாக குடி கொண்டது,ரே படம்
பண்ணும் போது அந்த கலைநயம் திரையில் கூடிக்கொண்டது.
கல்லூரியில் ஆசிரியர்கள் போற்றும் சிறந்த மாணவனாக விளங்கிய ரே, தான் தேடி
சேகரித்த பல பொக்கிசங்களை கையாண்டு 1972 ஆம் ஆண்டு"Inner eye" எனும்
குறும்படம் செய்தார்.
சாந்திநிகேதன் வாழ்க்கையில் வரைகலை மட்டுமல்லாமல்,இசைப்படம் தயாரிக்கும்
ஆர்வத்தையும் ரே கூட்டிக்கொண்டார்.அதே கல்லூரியில் இருந்த அயல் நாட்டு
ஆசிரியர்
ஒருவரிடம் இருந்து அயல் நாட்டு சங்கீதம், ஆங்கில புத்தகம், சினிமா
சம்பந்தப்பட்ட
நூல்களை கேட்டும் படித்தும் அறிவை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு
அமைந்தது. இந்த சமயத்தில் அதாவது 1941 ஆம் ஆண்டு தாகூர் இறந்தார்.
1942 ஆம் ஆண்டு படிப்பு முடித்து ரே தன் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டிய
நாள் வந்தது.இருந்தும் சினிமா மீது கொண்ட காதலும்,இசை மீது கொண்ட ஈர்ப்பும்
வார இறுதி நாட்களில் அவரை நகரத்திற்கு அழைத்தது.
நூலகங்களிலும் இசை தட்டு
வாங்குவதிலும் தனது முழு நேரத்தையும் செலவு செய்தார். இந்த சமயங்களில் ரே
நாடு, மக்கள், நிலவரம் என ஏதும் அறியாதவராக இருந்தார். அபொழுது தான் ஜப்பான்
தனது நாச வேலையை தொடங்கியது,கொல்கத்தா மீது சக்தி வாய்ந்த வெடி குண்டு
தாக்குதல் நடத்தியது.
சாந்திநேகேதான் இல் வெளியில் வந்த ரே ஆங்கிலேயர்
நடத்தி வந்த விளம்பர நிறுவனத்தில் பணியாற்ற தொடங்கினார் இந்த பயணம் சுமார்
13 ஆண்டுங்கள் நீடித்தது, அதாவது அவரது வெற்றி படமான " Pather Panchali"
வெளி வரும் வரையில். ஆங்கிலம் பெங்காலி மொழிகளில் உருவாக்கிய அச்சுக்கலை
பெரும் பரபரப்பை உண்டாகியது ,இதன் பயனாக 1971 இல் "Ray Roman", "Ray
Bizarre"
போன்ற வடிவங்களுக்கு உலக அளவிலான பல பரிசுகள் அவரிடத்தில் குவிந்தது.இந்த
வெற்றிக்கு பின்னர் இந்திய நாட்டில் பாரம்பரியமாக பயன் படுத்தி வந்த
எழுத்து
வடிவமைப்பு, வரைகலை அமைப்பு போன்றவற்றை தனது விளம்பர நிறுவனத்தில் பயன்
படுத்த ஆரம்பித்தார். பின்னாளில் அதே அம்சத்தை தான் உருவாக்கிய
படங்களில் உபயோகப்படுத்தி இருப்பார்.
இந்த சமயத்தில்தான் முன்னாளில் ரே வோடு பணியாற்றிய
g.k.குப்தா என்பவர் "Signet Press" என்ற புத்தக அச்சு நிறுவனத்தை
உருவாக்கினார்,அவர்
அந்த நிறுவனத்தில் அச்சு ஆகும் புத்தகங்களுக்கு முகப்பு பக்கத்தை
வடிவமைக்கும் வாய்ப்பை ரே விற்கு கொடுத்தார் . பெங்காலி புத்தகம் அதிகம்
படிக்காத ரேவுக்கு இந்த சூழல் Pather Panchali, Bibhuti Bhushan Banarjee
எழுதிய நாவல் மற்றும் பல நூல்களை படிக்கும் வாய்ப்பை உருவாக்கி
கொடுத்தது.இதே போன்று தாகூரின் பல அறிய நூல்களையும் படிக்கும்
வாய்ப்பையும் பெற்றார்.
signet press ரே வின் தந்தை பற்றிய நூல் ஒன்றையும் பின்னாளில் வெளியிட்டு
பெருமை கொண்டது.
சத்யஜித் ரே சாதனை தொடரும் ..
(அடுத்த வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள் )
No comments:
Post a Comment