Friday, June 22, 2012

சத்யஜித் ரே-உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (பாகம்-4)




" பல ஆயிரம் புத்தகங்கள் புகட்டாத அறிவை தனது முதல்நாள் படப்பிடிப்பு அனுபவத்தில்  கற்றுகொண்டதாக" தான் அனுபவத்தை குறித்து வைத்த ரே தொடர்ந்து தனது படத்திற்கான முதலீடாளரை தேடிய வண்ணம் இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் "Prix International" விருது பெற்ற "Do Bhiha Jamin" மற்றும்  "Kurusawa" ரே வின் முயற்சியை அறிந்து அவருக்கு ஆதரவு அளித்த சம்பவம் வரலாற்றில் மிக முக்கிய தருணம் எனலாம். தகுந்த முதலீடாளருக்காக  காத்துகிடந்த நேரங்களில் எல்லாம் சோர்வடையாமல் தான் எவ்வாறு படம் உருவாக்க வேண்டும் என்று படிப்படியாக  வண்ணம் தீட்டும் கலையால் நிவர்த்தி செய்து வந்தார். இப்படி அவர் தீட்டிய ஓவியங்கள் எல்லாம் புது வடிவத்தை கொடுத்து ரே வை ஒரு சிறந்த கலைஞனாகவும் முத்திரை  காட்டியது. 

ஒரு ஆண்டு முயற்சிக்கு பின் Ana Dutta என்னும் முதலீட்டாளர், ரே வின் படத்திற்கு சில ஒப்பந்தங்களோடு முதலீடு செய்ய சம்மதம் தெரிவித்தார், ஆதலால் அளவில்லா இன்பம் கொண்ட ரே அவசர அவசரமாக படத்தினை தொடர்ந்தார், ஆனால் விதி வேறு செய்தது, Ana Dutta அவர்கள் முதலீடு செய்த மற்றுமொரு படம் நஷ்டம் அடைய மீதம் உள்ள தொகையை தர இயலாதவராக Ana Dutta ஆனார். இந்நாளில் செய்வது அறியாது தவித்த ரே  தனது மனைவியின் நகைகளை விற்று படம் எடுக்கும் முயற்சியை தொடர்ந்தார். 


விடா முயற்சியாக முதலீட்டாளரை தேடி வந்த ரே தனது நண்பரின் ஆலோசனையின் பேரில் வங்காள முதல்வரை பார்த்து உதவி கேட்க ,அவரும் சம்மதம் தெரிவித்த அதே நாளில்தான் ரேவின் மகனான சந்திப் இம்மண்ணில் பிறந்தார். ஒரு வழியாக அரசாங்க  பணம் வந்தடைய படம் எடுப்பதை ரே தொடர்ந்தார்.ஆனால் அதிலும் ஒரு இன்னல் இருக்கவே செய்தது. அரசு சிறு சிறு தொகையாக கொடுக்கும், அந்த பணத்தினை செலவு செய்ததற்கான ஆதாரங்கள் அனுப்பிய பின்பே அடுத்த கட்ட தொகையை அரசாங்கம் அனுப்பும் ஆகையால் படம் தயாரிக்கும் காலமும்,நேரமும் அதிகரித்துக் கொண்டே போனது. 

Monroe Wheeler என்னும் அயல்நாட்டு  படப்பிடிப்பாளர் அயல்நாட்டு  கண்காட்சிக்கு இந்திய படம் ஏதேனும் போடுவதற்காக  தேடிக்கொண்டு  இருக்க, ரே தான் எடுத்து சேகரித்து வந்த pather panchali படத்தின் புகைப்படத்தை  கொடுத்து கருணையோடு அந்தக்  கண்காட்சியில் வைக்கும்படி கோரினார்.


இவ்வாறு படிப்படியாக  படத்தை முடித்த ரே 1955 ஆம் ஆண்டு படத்தை திரையில் ஓட்டினார்.படமும் மாபெரும் வெற்றியை உலகுக்கு காட்டியது. ரே வின் விளம்பரம் செய்யும் அனுபவத்தின் மூலமாக பெரிய அளவு cut out வைத்து கொல்கத்தா நகரையே அசத்தினார். கொல்கத்தா வந்த பிரதமருக்கு  சிறப்பு ஒளிபரப்பும் செய்யப்பட்டது. வெற்றி பலனாக canes திரைப்பட விழாவிற்கும் சிபாரிசு செய்ய பட்டது கூடுதல் செய்தி.

  

சத்யஜித் ரே புகழ் உயரும் ...
(அடுத்த  வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள் )


Widget byLabStrike


1 comment: