Monday, July 16, 2012

பில்லா பீட் மிஸ்ஸிங்!


பில்லா I I பற்றி நானொன்றும் புதிதாக சொல்லப் போவதில்லை.எனக்கு முன் ஏனைய பதிவர்கள் படம் வந்த சூட்டில்,சூட்டோடு சூடாகவே  எழுதி தள்ளிவிட்டார்கள்.இருந்தாலும் என் பங்குக்கு என்பதைவிட என் தம்பி சிவபிரபு கேட்டுக்கொண்டதால் எழுதுகிறேன்.
ஆரம்பக் காட்சியிலேயே அஜித்தின் "அசல்முகத்தை காட்டுகிறார்கள்(அசல் படம் இல்லீங்கோ).எதிரியிடம் சிக்கி இருக்கும் அஜித் சிக்குடைத்து "என் வாழ்க்கை ஒவ்வொரு நிமிசமும்,நொடியும் "என்கிற ரீதியில் தன் நிஜ வாழ்க்கையை பிரதிபலிப்பது போன்று வசனம் பேசுகிறார்.நல்லாதான் இருக்கு அறிமுகம்...இருந்தாலும்..................

ஆரம்பத்தில் இலங்கை அகதியா இந்தியா வருகிற அஜித் எப்படியெல்லாம் பணம் என்கிற பசி போக்க தேடி அலைகிறார்..பணம் மேல் பணம் எப்படி பண்ணுகிறார்..ஆர்டினரி டேவிட் பில்லா எப்படி அசால்ட் பண்ணும் அல்டிமேட்  பில்லாவாகிறார் என்பதே கதை..

படம் முழுக்க சுட்டு தள்ளுகிறார்(கதையை அல்ல).நடிப்பு,பஞ்ச் டையலாக்  பரபரப்பு இல்லாமல் பேசுவது,எதிரிகளை சாகடித்துவிட்டு சர்வசாதரணமாய் நகர்வது  அஜித்துக்கு மட்டுமே கைவந்த கலையாகி இருக்கிறது.படம் முழுக்க அஜித்தை விட அதிகம் பேசுவது துப்பாக்கிதான்.(விஜய் படம் பத்தி சொல்லல)..படத்தில் அஜித் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் செதுக்கி எடுக்கப்பட்டவை.

அஜித்தை டானாக பார்ப்பதை விட இந்தியாவின் BOND ஆக நான் பார்த்தேன்.காட்சிகள் கண்களுக்கு விருந்தாகிறது.கதையில் திருப்பங்கள் இல்லாததால் கொஞ்சம் தொய்வாகிறது.பொண்ணு,ரொமான்சுன்னு  ரொம்ப சுத்தி மொக்க பண்ணாம கதானாகியை ஊறுகாயாய் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள்.

நான் நேத்து படம் பாக்க போனதே ரசிகர்களின்  ஆரவாரத்தோட அஜித்தை ரசிக்கனும்னு தான்..பட் ரசிகர்கள் அலப்பறை அட்டகாசம்  பண்ற  ஐட்டம் ஏதோ படத்துல மிஸ்ஸிங்..அப்புறம் அந்த பில்லா பீட்..படத்தின் இடைவேளையில் ஓரிடத்தில் மட்டும் வருகிறது.அதுவும் மிஸ்ஸிங்..அப்புறம் அந்த கிளைமாக்ஸ் சாங்..அத ஓபனிங் சாங்கா யூஸ் பண்ணிருக்கலாம்.
மொத்தத்துல படம் நல்லாதான் இருக்கு.....................இருந்தாலும்.................................................................





.........................................ஏதோ  மிஸ்ஸிங்..........BUT எனக்கு பிடிச்சிருக்கு....


Widget byLabStrike


6 comments:

  1. ஏதோ............ சொல்ல வர்றீங்க............
    ஆனா........... சரியா சொல்லலை........

    ReplyDelete
  2. ''Scarface'' என்ற ஆங்கில படத்தின் தழுவல் அண்ணா இந்த படம் ..

    ReplyDelete
  3. ''Scarface'' என்ற ஆங்கில படத்தின் தழுவல் அண்ணா இந்த படம் ..

    ReplyDelete
  4. ''Scarface'' என்ற ஆங்கில படத்தின் தழுவல் அண்ணா இந்த படம் ..

    ReplyDelete