Monday, July 23, 2012

அதிசயங்கள் வாய்ப்பிளக்கின்றன!


நீ புன்னகைக்கும் போதெல்லாம்
பொலிவிழக்கின்றன விண்மீன்கள்!
நீ முகம்காட்டும் போதெல்லாம்
ஒளியிழக்கிறது நிலவு!
நீ வெளிவந்ததும் நிலவு வந்ததென்று
மறைந்து பார்க்கிறது சூரியன்!
உன் கூந்தல் கண்டதும்
குடிவரத் துடிக்கின்றன மலர்கள்!
உன் உடல்தொட்டு  உயிர்வாழ
விரும்பி உயிரிழக்கிறது பட்டுப்புழு!
காலணியில்லாமல் உன் கால்படும் தருணதிற்காய்
காத்துக்கிடக்கிறது பூமி!
உன் கண்களை சுற்றி சுற்றியே
வட்டமடிக்கிறது மீன்கொத்திபறவை!
உன் உதட்டுசாயத்தை ஒற்றி கொள்ள
வந்தமற்கிறது  வண்ணத்துப்பூச்சி!
உன் எச்சில் துளிகளில்
தேன்எடுக்க ஏங்கித்தவிக்கிறது தேனீ!
உன் மார்பு முகட்டின் மத்தியில்
ஊற்றெடுக்கட்டுமா என்கிறது அருவி!
அதிசயங்கள் வாய்ப்பிளக்கின்றன
உன்னைக் கண்டாலடி!
என்னிடத்தில் நீ சிக்கிக் கொண்ட
மாயம் என்னென்று சொல்வேனடி!


Widget byLabStrike


3 comments: