Saturday, July 28, 2012

பலி வாகனம் ஆகிப்போகும் பள்ளி வாகனங்கள்!


இந்த வாரத்திலேயே இரண்டு குழந்தைகள் பள்ளி வாகனகளுக்கு பலியாகி இருக்கின்றன..பணத்தை மட்டும் பெற்றோர்களிடம் பெற்றுக்கொண்டு பள்ளி பல்லிளிக்கிறது.ஒன்றுக்கும் உதவாத காலாவதியான வாகனங்கள் கடைநிலையாக  குறைந்த விலைக்கு வாங்கி பள்ளிகளில் பயன்படுத்துகிறார்கள்.அதிலும் 40 மாணவர்கள் அமரும் பேருந்துகளில் 80 மாணவர்களை  ஏற்றி செல்கிறார்கள்.காரணம் பள்ளி மட்டுமல்ல..பெரிய பள்ளி என்றால் சீட் கிடைத்தால் போதும் என்கிற பெற்றோரின் மனநிலை..பள்ளியே 3KM-குள் வீடு இருந்தால் மட்டுமே சேர்த்துக்கொள்வோம் என்றாலும், தன் நண்பரின் வீட்டு விலாசத்தை தன் விலாசமாக போலியாக காட்டியாவது அந்தப் பள்ளியில் சீட் வாங்கிவிட வேண்டுமென்கிற பெற்றோரின் வெறி.LKG சேர்க்கப் போகும்போதே MBBS சீட் வாங்கப் போவது போன்ற பரபரப்பு.இந்த அறியாமை மனநிலையைதான் பள்ளிகள் தங்களுக்கு பணம் சேர்க்க சாதகமாக்கிக் கொள்கின்றன..தனது குழந்தையை சேர்க்க ஓராண்டுக்கு முன்பே பள்ளி வாசலில் வரிசையில் காத்திருக்கும் பெற்றோர் பள்ளி வாகனம் நன்றாக இருக்கிறதா?பயண தூரம் குழந்தை சோர்வடையாமல் வந்து போக  ஏதுவாக இருக்குமா ?குழந்தை விளையாட மைதானம் இருக்கிறதா?என்பதைப் பற்றியெல்லாம் எண்ணுவதில்லை..படி படி என்று மட்டுமே சொல்கிற பள்ளியே வேண்டுமென்கிறார்கள்.ஒரு பாடத்தில் தோல்வியுற்றால் மாணவர்கள் தற்கொலை செய்யும் கோழைத்தன  மனநிலைக்கு பெற்றோர்களே வழிவகை செய்கிறார்கள்.
இப்படியெல்லாம் தனது கனவை  தன் குழந்தைகளின் மீது  புதைத்து கொடுமை செய்யும் முன் பெற்றோர்கள் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும்.தாங்கள் பள்ளி மாணவனாக இருந்தபோது இப்படியெல்லாம் இருந்தோமா?எத்தனை பாடத்தில் தோல்வியுற்றிருக்கிறோம்.இருந்தும் நாமும் இந்த சமுதாயத்தில் வாழவில்லையா?
பெற்றோர்களே..குழந்தைகளை சுதந்திரமாக விடுங்கள்..அவர்கள் அவர்களுக்கான எதிர்காலத்தை தீர்மானிக்கட்டும்..என்னடா பள்ளிபேருந்தை பற்றி சொல்லவந்தவன் ஏதேதோ உளறி இருக்கிறான் என என்ன வேண்டாம்.எல்லாமே ஒன்றை ஒன்று சார்ந்ததுதான்.


Widget byLabStrike


2 comments:

  1. /// தாங்கள் பள்ளி மாணவனாக இருந்தபோது இப்படியெல்லாம் இருந்தோமா?எத்தனை பாடத்தில் தோல்வியுற்றிருக்கிறோம்.இருந்தும் நாமும் இந்த சமுதாயத்தில் வாழவில்லையா? ///

    ஒவ்வொரு பெற்றோரும் இதை அறிந்து கொள்ள வேண்டும்.

    நன்றி.
    (த.ம. 1)

    ReplyDelete