Monday, July 30, 2012

தாகம்!


பறவைகளின் குரல்
இப்போ கேட்பதில்லை
பேரிரைச்சல் காதைப் பிளக்கிறது!
வருடும் காற்று
தேகம்  தொடுவதில்லை
வெப்பசலனம் உடலை எரிக்கிறது!
நல்லக் காற்று
சுவாசிக்க இல்லை
கார்பன் காற்றை மூக்கு நுகர்கிறது!
பயிர்கள் இப்போ
விளைவது இல்லை
ரசாயனம் தின்று மண் இறக்கிறது!
தோண்டுமிடமெங்கும்
தண்ணீர் இல்லை
பூமியும் சேர்ந்து தாகத்தில் தவிக்கிறது!
மரங்களை வெட்டினோம்
பிளாட் போட்டோம்
எதிர்வரும் சந்ததியும் இன்னலில் தவிக்கிறது!


Widget byLabStrike


4 comments:

  1. நாட்டில் நடக்கும் உண்மையை, அழகான கவிதை மூலம் சொன்னது அருமை...
    நன்றி...

    (த.ம. 1)

    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    ReplyDelete
  2. Replies
    1. ஆமாம் நண்பரே..மனிதன் இயற்கையை கொன்றான்

      Delete