Wednesday, July 18, 2012

ராஜேஷ் கண்ணா சரித்திரம்




ராஜேஷ் கண்ணா(29 டிசம்பர் 1942 - 18 ஜூலை 2012)

இயற்பெயர் ஜடின் கண்ணா.

இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாராக அறியப்பட்டவர்.

1969-1971 ஆண்டுகளில் முன்னணி கதாநாயகனாக  தொடர்ச்சியாக 15 சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
(Aaradhna, Do Raaste, Bandhan, Doli, Khamoshi, Ittefaq, Safar, Kati Patang, The Train, Sachaa Jhutha, Aan Milo Sajna, Mehboob Ki Mehndi, Dushmun, Andaaz,Anand).இதில் அதிகப்பட்ச படங்களில் ஹேமாமாலினியுடன்  ஜோடி சேர்ந்துள்ளார்.


அந்தக்கால கன்னிகளின் கனவுக்கண்ணனாக விளங்கியவர்.

ஆராதானா படத்தில் இடம்பெற்ற "ரூப் தேரா மஸ்தானா" பாடலில் ஒரு டேக்கில் செய்து முடித்து பாலிவுட்டில் வரலாறானவர்.
ஆராதனா திரைப்படம் ஹிந்தி மொழியறியாத பல ஊர்களில் கூட ஆராதிக்கப்பட்டது வரலாறு.


ராஜேஷ் கண்ணாவின் சினிமா தாக்கத்தால், 1960 மற்றும் 1970 களில் பிறந்த பல குழந்தைகளுக்கு  ராஜேஷ் என்று பெற்றோரால் பெயரிடப்பட்டது.

ராஜேஷ் கண்ணாவையே மணந்து கொண்டதாக எண்ணி அவர் படத்தை வைத்து தாலிக்கட்டிக்கொண்ட ரசிகைகள் ஏராளம். 

ராஜேஷ் கன்னாவை  முத்தமிடுவதாய் எண்ணி அவரது காரை  முத்தமிடுவார்களாம் ரசிகைகள்.கார் முழுக்க முத்தத்தால் நணைந்து உதட்டுச்சாயம் ஒட்டி இருக்குமாம்.அவ்வளவு கிரேஸ் ஒரு மனிதனுக்கென்றால் அது அவருக்கு மட்டும்தான்.

மிஸ்டர் இந்தியா பட்டம் முதன் முதலில் ராஜேஷ் கண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.அது சினிமாவுடன் தொடர்புடைய பட்டம் இல்லையென ராஜேஷ் கண்ணா ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.


ராஜேஷ் கண்ணா கரிஸ்மா மும்பை பல்கலைகழகத்தில் பாடமானது ,அவர் புகழ் சரித்திரமானது.



ராஜேஷ் கன்னா 45 ஆண்டுகளில் (1966-2011) 180 திரைப்படங்கள் நடித்துள்ளார்.

 


அவர் இறந்தாலும் அவர் புகழ் என்றும் இறவாது வாழும் என்பதற்கு இதுவே சாட்சி..அவர் ஆத்மா சாந்தியடையட்டும்..


Widget byLabStrike


2 comments: