Saturday, September 14, 2013

ஹிட்லர் - ஈவா காதல்!

வரலாறு சொல்லும்  புகைப்படம் - என் கோட்டோவியத்தில்!
 
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வருகிற தருணமது,ரஷ்யப்படைகள் ஹிட்லர் இருக்குமிடத்தை எப்போவேண்டுமானாலும் நெருங்கலாம் என்கிற கட்டம்,எதிரிகளிடம் சிக்கி பணய கைதியாவதை விரும்பாத ஹிட்லர் தனக்குத்தானே முடிவெழுத முடிவெடுத்த சமயம்,அதுவரை ஹிட்லருக்கு காதலியாய் இருந்த ஈவாபிரவுனிடம் தன் தற்கொலை எண்ணத்தை ஹிட்லர் வெளியிட,ஈவாபிரவுன்" இருக்கும் வரை ஒன்றாய் இருந்தோம்,இறப்பிலும் ஒன்றாய் இறப்போம்" என்று இன்முகம் மாறாது கூற,நெகிழ்ந்து போன ஹிட்லர் "எனக்காக உன் உயிரையும் தர காத்திருப்பவளே,உனக்காக நான் என்ன தரவேண்டும் சொல்" என்கிறார்.
அதற்கு ஈவாபிரவுன் "வேறென்ன கேட்கப்போகிறேன் உங்களிடம்,காதலி என்கிற ஸ்தானத்தை மாற்றி மனைவி என்கிற அங்கிகாரத்தை தாருங்கள்,அதுபோதும்..நான் மரணிக்கும்போது மகிழும் செய்தி அதுதான் என்கிறாள்.
அவள் விருப்பத்தை ஹிட்லர் நிறைவேற்ற,ஹிட்லர் விருப்பத்தை ஈவா நிறைவேற்றி இறந்தனர் இருவரும் ஒன்றாய்.இரண்டாம் உலகப்போரை போலவே அழியாத சுவடானது ஹிட்லர்,ஈவா காதலும்!


Widget byLabStrike


2 comments: