Monday, July 9, 2012

காதல் கற்றுத்தந்த சித்தாந்தம்!


பார்வையாலே கடத்தினாய்
மாவோயிஸ்ட் என்றுரைத்தாய்!
மெல்லிய முத்தமிட்டு
அகிம்சை எனக்கு போதித்தாய்!
இறுக்கிய அணைப்பில்
சோசலிசம் சொல்லித்தந்தாய்!
துகிலினை உரிக்கையில்
கம்யூனிசம் கற்றுத்தந்தாய்!
முனகலின் பேரொலியில்
புரட்சிமொழி பேசி நின்றாய்!
காமத்தின் உச்சத்தில்
தீவிரவாதம் செய்து வென்றாய்!



Widget byLabStrike


2 comments: