பதிவர்களை ஒரே இடத்தில் சங்கமிக்க செய்து,தமிழ் வலைப்பதிவர் திருவிழாவை
சீரும் சிறப்புமாக நடத்தி முடித்த விழாக்குழுவினருக்கு என்
நன்றியும்,வாழ்த்துகளும்..சென்னை மையத்திலே மண்டபம் எடுத்து,அழைப்பிதழ்
அனுப்பி,வந்தாரை வரவேற்று,முகம் கோணாமல் உணவு கொடுத்து உபசரித்து,விழாவை
சிறப்பித்த அனைத்து அன்பார்ந்த பதிவர்களுக்கும் மீண்டும் ஒரு நன்றி..
எண்ணிப்பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது,இவ்வளவு பதிவர்களை ஓரிடத்தில்
திரட்டி உள்ளமகிழ செய்தது..நேற்று பதிவர் சங்கத்தில் நடந்த
சிறப்புகளையும்,மகிழ்ச்சி அரங்கேற்றங்கங்களையும் நானொன்றும் புதிதாக சொல்ல
வேண்டியதில்லை..எனக்கு முன்னரே ஏனைய பதிவர்கள் சூட்டோடு சூடாக செம ஹாட்டாக
எழுதி முடித்து விட்டார்கள்..
இருந்தாலும் பதிவர்கள் மீதும்,பதிவர் திருவிழாவின் மீதும்,அக்கறை கொண்டவனாக
இனிமேலும் அடிக்கடி திருவிழா அரங்கேற்றங்கள் நடக்க வேண்டும் அதில் பங்கு
பெறுவது முக்கியமான நிகழ்வு என்று ஒவ்வொரு பதிவரும் உணர்ந்திட வேண்டும்
என்கிற உள்ளார்ந்த அபிலாசையுடனும் பதிவர் திருவிழாவில் நடந்த சில
குறைகளையும் நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.நிறைகளைப் பற்றி மட்டுமே
பேசிக்கொண்டு நம்முள் உள்ள குறைகளை களையாமல் விட்டோமானால் அது சில
நேரங்களில் சிலரின் வெறுப்புக்கும்,மன வருத்தத்துக்கும்ஆளாகும்,பதிவர்
திருவிழா என்பது ஒரு அக்கறை கொண்ட நிகழ்வாக பதிவாகாமல்,காமெடி நிகழ்வாக
அமைந்து விடும் என்பதால் எழுதுகிறேன்.
முதலில் பதிவர்களில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்..நிகழ்ச்சி ஆரம்பித்து
மேடையில் தொகுப்பாளர்கள்,சிறப்பு விருந்தினர்கள் விழாவை பற்றி பேச ,கீழே
அமர்ந்திருந்த பதிவர்கள் அவரவர் பங்குக்கு சலசலக்க தொடங்கினர்..மேடையில்
பேசுபவரின் கருத்தை கேட்கவோ,செவி உணரவோ வாய்ப்பில்லாமல் போனது..
அப்புறம் மைக்...நீங்க மட்டும்தான் குரூப் வாய்ஸ் கொடுப்பீங்களா நான்
கொடுக்குறேன் பார்ன்னு அதுவும் சேர்ந்து களம் இறங்கிடுச்சி..பதிவர்கள்
பேசும் போது ஏதோ பேசுறாங்கன்னு தெரிஞ்சுது..என்ன பேசுறாங்கன்னு புரியவே
இல்ல..
அடுத்து மேடையில் வீற்றிருந்த பதிவர்கள்,கேபிள் சங்கரும்,சிபி.செந்திலும்
பதிவர்கள் அறிமுகத்தின்போது பதிவர்களை குறுக்கிட்டு,குறுக்கிட்டு பேசி
நேரம் குறைவாக இருப்பதால் குறைத்து பேசுங்கள் என்று கூறியே அதிகம் மொக்கை
போட்டது இவர்கள்தான்.அனைத்து பதிவர்களையும் குறுக்கிடாவிடினும்,அவர்களுக்கு
ஏற்கனவே அறிமுகமான பதிவர்களை கலாய்த்தும்,நக்கலடித்தபடியும்
இருந்தனர்.புரியாத மைக்கில் இவர்களின் காமெடி வெறும் சத்தமாகத்தான்
கேட்டது.
சிபி.செந்தில் ஆரூர் மூனா வை அழைக்கும் போது இவர் பத்தாயிரம் சம்பளம் வாங்கினால் 5000 க்கு தண்ணி அடிப்பவர் என்று நகைச்சுவையாக கூறி இருந்தாலும் ,அதை மூனாவும் ஜாலியாக
எடுத்துக்கொண்டாலும்,புதிய பதிவர்களுக்கும் ,அந்த குறிப்பிட்ட பதிவர்களைப்
பற்றி அறியாதவர்களுக்கும் அது எந்த மாதிரியான பிம்பத்தை ஏற்படுத்தி
இருக்கும் என்பது தெரியாது.அது மாதிரி பேசுவதை தவிர்க்க வேண்டும்.பதிவர் விழாவுக்கு பெண் பதிவர்களும்,வயது
முதிர்ந்த பதிவர்களும் வந்திருந்ததாலும்,ஒளிப்பரப்பு செய்யப்பட்டதாலும்
இதை குறிப்பிட வேண்டி உள்ளது.
பதிவர்கள்,சில பல பதிவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்களாக
இருக்கலாம்..அதற்காக காமெடி பண்ணுகிறேன் பேர்வழி என்று மேடையில் வைத்து
கலாய்ப்பது,சிரிப்பது என்பது புதிய பதிவர்களுக்கும் மற்றவர்களுக்கும்
பதிவர் விழா என்பது சிரத்தைமிக்க விழா என்கிற எதிர்பார்ப்பை மாற்றி ஏதோ
கூடி கும்மியடிக்கிற நிகழ்வாக மனதில் பிம்பம் அடைந்து
விடக்கூடும்.வெளியூர்களில் இருந்தும்,வெளிநாட்டில் இருந்தும் பெரிதாக
எதிர்ப்பார்த்து வருபவர்களுக்கு ஒரு ஏமாற்றத்தை உண்டு செய்யவும்
வாய்ப்பிருக்கிறது.
மேடை நகைச்சுவை என்பது சேட்டைக்காரன் பேசினாரே நான் தமிழ் இலக்கியத்துக்கு
சேவை செய்கிறேன்,ஏனெனில் நான் கவிதைகள் எழுதுவதில்லை என்று..அது மாதிரி
இருக்க வேண்டும்..அது அனைவராலும் முகம் கோணாமல் ரசிக்கப்பட்டது..
என்னடா ஒரு சப்ப மேட்டர புடிச்சி சப்ப கட்டு கட்டி பதிவெழுதி இருக்கானேன்னு
யாரும் என்ன வேண்டாம்.யார் மீதும் எனக்கு எந்த தனிப்பட்ட
வெறுப்புணர்ச்சியோடோ ,மனவருத்ததோடோ நான் இதை எழுதவில்லை,யாரையும்
புண்படுத்தும் நோக்கமும் கிடையாது..
இனி வரும் விழாக்களிலும் யாரும் மன வருத்தத்திற்கு ஆளாகி விடக்கூடாது
என்கிற நல்லெண்ணத்திலும்,இவ்வளவு சிரத்தை எடுத்து செய்கிற விழாக்களில் மைக்
போன்ற சிறு சிறு குறைகளால் யார் என்ன பேசுகிறார்கள் என்று அறிய இயலாத நிலை
இல்லாமல் பார்த்துக்கொள்ள வேன்றுமேன்கிற நேர்மறை சிந்தனையிலுமே
எழுதுகின்றேன்.
மேலும் வரும் காலத்தில் பதிவர்கள் என்பவர்களும் பதிவர் விழா என்பதும்
தமிழ் சமுதாயத்துக்கு வேண்டப்பட்டதாக,ஆக்கப்பூர்வமாதாக பதிவாக வேண்டுமே
தவிர,வந்தார்கள் கூடினார்கள் ,கலாய்த்தார்கள்,சிரித்தார்கள் சென்றார்கள்
என்று ஆகி விடக்கூடாது என்கிற நோக்கத்திலேயே இதை சொல்கிறேன்..யாரையும்
வருத்தப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்..நன்றி..
விழா குழு உங்கள் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளும் நன்றி
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே..
Deleteஎதிர் காலத்தில் கருத்தில் கொள்ள வேண்டிய சரியான கருத்துக்களைக் கூறியுள்ளீர்கள்
ReplyDeleteதங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே..மீண்டும் வருக
Deleteஆக்கபூர்வமான கருத்துக்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே..மீண்டும் வருக..
Deleteமிக்க நன்றி நண்பரே..மீண்டும் வருக..
ReplyDeleteஉங்களை சந்தித்தலில் மிக்க மகிழ்ச்சி...
ReplyDeleteநானும் அருண் (ஆளுங்க வலைப்பூ) அவர்களும், பேருந்தில் என்ன பேசினோமோ அதையே சரியாகப் பதிவாக்கி உள்ளீர்கள் சார்... கவனிக்க வேண்டிய விசயங்கள்...
வாழ்த்துக்கள்... நன்றி... (TM 2)
தங்களை சந்தித்ததும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது நண்பரே..மிக்க நன்றி..மீண்டும் சந்திப்போம்
Deleteநீங்கள் கூறிய விடயங்கள் நியாயமாகவே படுகின்றது. வருங்காலத்தில் இப்படியான செயல்களை செய்யாமல் தவிர்க்கும் பக்குவம் அனைவரும் பெறுவார்கள் என்றே நம்புகின்றேன். நிறையை மட்டும் சொன்னால் போதாது, குறையையும் சொல்வதே நல்ல குணமாக இருக்கும் ..
ReplyDeleteமேடை நாகரிகம் மற்றும் சந்திப்புக்களுக்கான நாகரிகம் நம்மில் அதிகரிக்க வேண்டும் .. என்பதில் உடன்படுகின்றேன்..
நல்ல பதிவு !!!
நன்றி நண்பரே தங்கள் கருத்துக்கும்..வாழ்த்துக்கும்..மீண்டும் வருக..
Deleteபதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.
ReplyDelete"மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?"
http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_27.html
மிக்க நன்றி நண்பரே..வருகைக்கும் கருத்துக்கும்..மீண்டும் வருக..
Deleteகிண்டலும் கேளியும் விழா நேரத்தில் இருக்கத்தானே செய்யும் குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது என் கருத்து. இருப்பினும் விழா குழுவினர் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
ReplyDeleteகேலி கிண்டல் இருக்க வேண்டும்,நகைச்சுவை இருக்க வேண்டும்தான்..முகம் சுளிக்கும்படி நடந்து விடக்கூடாது என்பதுதான் என் கருத்து..நன்றி தோழி..
Deleteஉண்மை, நண்பர்கள் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்ளலாம் மேடை என்கிறபோது சற்று தவிர்க்கப்பட வேண்டியதுதான்
ReplyDeleteநன்றி நண்பரே தங்கள் கருத்துக்கும்..வருகைக்கும் ..மீண்டும் வருக..
Delete