Thursday, September 27, 2012

1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்த அசகாயசூரர்

இயற்பெயர் நாகேஸ்வரன்..வீட்டில்,நண்பர்களால் செல்லமாக கூப்பிடும் பெயர் குண்டுராவ்.. மக்கள் மனதில் நகைச்சுவை மன்னன் இவர்.

1933-செப்டம்பர் 27-ம் தேதிஒரு கன்னட பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து சாதனை  படைத்தார்.

சரித்திரம் என்று என் பெயர் சொல்லுமோ அன்று நான் வீட்டிற்கு  வருகிறேன்..அதுவரை போராடுகிறேன் என சொல்லி சென்னை வந்தவர்.

சிறிதுகாலம் ரயில்வேயில் பணியாற்றி,நடிப்பின் மீதுள்ள தீராத தாகத்தால் நாடகம் நடித்தவர்.

ராமாயணம் நாடகத்தில் வயிற்றுவலிக்காரன் வேடம் போட்டு வாழ்ந்து காட்டி,நாடகத்துக்கு தலைமை வகித்த எம்.ஜி.ஆரால் பாராட்டப்பட்டவர்.ஆதலால் நடிப்பை நோக்கி பயணப்பட்டவர்.

இவர்  நடித்த முதல் திரைப்படம் மனமுள்ள மருதாராம். சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும் தமிழ்த்திரையை கலக்கியவர்.தயாரிப்பாளர்களுக்கு  வெற்றியை சுவைக்க தந்தவர்.

வேறு மதத்தை சேர்ந்த  பெண்ணை திருமணம் செய்ததால் குடும்பத்தினரால் ஒதுக்கி  வைக்கப்பட்டவர்.வெளிநாட்டுக்கார் ஒன்றை வாங்கி தன் தாயை ஆசையோடு சந்திக்க போனார்,அவர்தாய்க்கு அப்போ இறுதி சடங்கு நடந்து கொண்டிருந்தது.பிரச்சினைகள் பல கடந்து வாழ்வை வென்றவர்..

அவர்தான் நகைச்சுவையால் நம் மனதை எல்லாம் வென்ற  நாகேஷ்(27 செப்டம்பர் 1927 - 31 ஜனவரி  2009 ).

நகைச்சுவை மன்னனுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!





Widget byLabStrike


7 comments:

  1. திரு நாகேஷ் அவர்களை அவரது பிறந்த நாளில் நினைவு கொள்வோம். அற்புதமான திறமை கொண்ட நடிகர்.
    நன்றி.

    ReplyDelete
  2. பலர் மனதில் வாழ்கின்ற நாகேஷ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. படைப்பாளி அவர்களுக்கு வணக்கம் .திரு .நாகேஷ் அவர்களின் இயற்பெயர் நாகேஸ்வரராவ் என்று படித்த நினைவு.அதை தெளிவு படுத்தி விடுங்கள்..அவர் நடித்த அபூர்வ ராகங்கள் படம் மிக மிக நல்ல நடிப்பு.அவரது பிறந்த நாள் அவரை பெருமைபடுத்தி விட்டீர்கள் .நல்ல உள்ளம் கொண்ட நீங்கள் வாழ எனது பிரார்த்தனை .
    அன்புடன் கருப்பசாமி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா..நானும் அறிந்தேன் நாகேஸ்வரன் என்பது அவரது இயற்பெயராம்..கூப்பிடும் பெயர் குண்டுராவ்..அறிய தந்தமைக்கு நன்றி ..மாற்றிவிட்டேன்..

      Delete
  4. அன்பு படைப்பாளி அவர்களே ,நன்றி எல்லாம் வேண்டாம் .உங்களக்கு ஆக்கும் திறன் அதிகம்.நினைவாற்றலும் மிக நன்றாக உள்ளது.புதிய கோணத்தில்லும் நன்றாக ஆய்வு செய்கிறீர்கள்.
    பணி,பாணிஇவை சிறக்க வாழ்த்துக்குள் .
    அன்புடன் கருப்பசாமி.

    ReplyDelete