Monday, September 3, 2012

அண்ணா ஆர்ச் - அழியாத நினைவுகள் !


அண்ணா ஆர்ச் - சிறுவயதில் நான் ஊரிலிருந்த போது செய்தித்தாளிலும்,தொலைக்காட்சியிலும் பார்த்தது..பின்னாளில் கல்லூரி படிப்பிற்காய் சென்னை வந்து விட்டப்பின் வில்லிவாக்கத்தில் தங்கி இருந்ததால் அடிக்கடி அதனை கடக்க நேரிடுவதும் கண்டு மகிழ்வதுமாய் சுகமான அனுபவத்தை சுமந்து இருந்தது.கம்பீரமான இரு வளைவுகளும்,கலைநயமிக்க வேலைப்பாடும் அண்ணா ஆர்ச்சுக்கு மேலும் வலு  சேர்க்கும் விதமாகவும்,காண்போரை கவரும் அமைப்பிலும் இருந்தது சென்னையின் அடையாளத்தில் ஒன்றாக எல்லோரையும் கவர்ந்தது.அந்தப்  பகுதியை கடந்து செல்வோருக்கு அவர்களின் வாழ்வோடு வாழ்வாக இரண்டறக் கலந்துவிட்ட ஒரு விடயமாகவும் அண்ணா ஆர்ச் ஆகிவிட்டதை யாரும் மறுக்க இயலாது..காலத்தின் கோலத்தில்,வாழ்க்கையின் வேகத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கேற்ப மெட்ரோ ரயில் பாலம் கட்டுவதற்காய் அண்ணா ஆர்ச் இடிக்கப்பட்டு காலச்சக்கரத்தில் இப்போது காலாவதியாகிவிட்டது பலருக்கு கண்ணீரையும் வரவழைத்துவிட்டது.
வரும் காலத்தில்  மெட்ரோ ரயில் ஓடும் வேகத்தில் சமுதாயமும் அங்கே அப்படி ஒரு ஆர்ச் இருந்ததை மறந்து போகும்..அந்த ஆர்ச்சை கண்டு,கடந்து வளர்ந்தவர்களுக்கு அது என்றும் மறவாத ஒரு வடுவாய் அழியாத நினைவுகளோடு காலத்தை வென்று நிற்கும.


Widget byLabStrike


5 comments:

  1. போங்க சார், அண்ணா ஆர்ச், செம்புலிங்கம் சிலை-ன்னுகிட்டு. இப்படி வெட்டித்தனமாக ஆர்ச் அமைத்த பணத்துக்கு, நல்ல சாலை வசதி செய்திருக்கலாம்; நூலகம் கட்டியிருக்கலாம். விவசாயத்திற்கு செலவிட்டிருக்கலாம். மக்கள் மனநிலைக்கேற்பத்தான் ஆட்சியாளர்களும் இங்கு வந்து வாய்ப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே..மனித சிலைகளால் மானுடம் சிதைகிற நிலைதான் இங்கு நடக்கிறது..ஒன்று கட்டாமல் இருக்க வேண்டும்..கட்டிய பின் இடிப்பதால் பணம் தான் பாலாகிறது..

      Delete
  2. வணக்கம் படைப்பாளி .உண்மை நண்பரே ஆக்குவது கடினம் அழிப்பது எளிது .படைப்பது கடினம் .உடைப்பது எளிது.மக்கள் வரி பணம் தாம் வீணாகிறது.மக்கள் அறிகீர்களா இல்லையா புரியவில்லை .ஒரு அரசாங்கம் போட்ட சட்டம் அடுத்து வந்தால்,காணாமல் போன பட்டியல் .ஒருவர் கட்டிய கட்டடம் அடுத்தவர் வந்தால் இடிப்பு.மக்களுக்கு ஆட்சியா மக்கள் உணர்கிறோமா
    எங்கே நமது கேள்வி ஞானம் ஒன்றுமே புரியல உலகத்தில பாட்டுதாம் நினைவில் வருகுறது.
    அன்புடன் கருப்பசாமி



    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் அய்யா..ஆக்குவது கடினம்..சொந்த பணமில்லாமல்,மக்களின் பணத்தில் என்பதால் இவர்களுக்கு அழிப்பது எளிதாகிறது..

      Delete