Monday, September 10, 2012

பாகன் பந்தயத்தில் ஜெயிப்பான்


பாகன் - படம் ஒரு சைக்கிளின் பார்வையாலயே சொல்லப்படுகிறது.சைக்கிளை மையம்கொண்டுதான் கதை பயணிக்கிறது.சோடா விற்று வாழ்க்கை நடத்தும் கந்தன் திருமணத்தின் போது,பெண்வீட்டிலிருந்து  சீர் வரிசையாய் கொடுக்கப்படும் சைக்கிள்,கந்தன் மனைவியின் பிரசவத்திலிருந்து,குழந்தை பிறந்தபின்  அவனுக்கு விளையாட்டுப் பொருளாகவும்,அவன்  வளர்ந்து பெரியவனாகும் போது அவனுக்கு வாகனமாகவும் மாறி தொடரும் உறவை மையம் கொண்டு ஒரு காதலையும் சுமந்தபடி கதை செல்கிறது.

சைக்கிளை பார்த்தவுடனே என் மனதில் மலரும் நினைவுகள்  நிழலாட ஆரம்பித்துவிட்டது.என்னருகில் அமர்ந்திருந்த நண்பரும் அவருக்கும் சைக்கிளுக்குமான காதலை என்னிடம் பகிர்ந்தபடி இருந்தார்..சைக்கிளைப் பற்றி எழுத வேண்டுமானால் தனியாக பல பதிவுகள் எழுதலாம்.ஹ்ம்ம்..பிறகு பார்ப்போம்..இப்போ படத்திற்கு போவோம்..
மூன்று நண்பர்கள்..வேலைவெட்டி இல்லாமல் கள்ளுக்கடையில் உட்கார்ந்து கதை பேசுகிறவர்கள்..மூவருக்கும் எப்படியாவது பணக்காரர்களாகி  விடவேண்டும் என்கிற தீராக்கனவு..தக்காளி பிசினஸ் முதல் கோழிப் பண்ணைவரை ஏனைய பிராஜக்ட் பண்ணி ப்ளாப் பண்ணுகிறார்கள்.மீண்டும் கள்ளுக்கடையில்  உக்கார்ந்து கதையளக்கும் போது  தலையில் பல்பு எரிகிறது.

ஏதேதோ பிராஜக்ட் பண்ணி பல்பு வாங்குறதுக்கு பதிலா ஏதாவது ஒரு பணக்கார பெண்ணை கரெக்ட் பண்ணி வீட்டோட மாப்ளை ஆகிட்டா என்ன..நண்பர்களின் ஆலோசனையின்படி புது பிராஜக்ட் ஆரம்பிக்கிறார் கதாநாயகன்.போட்டவலையில் பணக்கார பெண்ணும் சிக்க பிராஜக்ட் ஓகே ஆகிறது.ஆனால் பணக்காரப்பெண் வீட்டிலோ காதலுக்கு எதிர்ப்பு வர "உங்கள் பணமும் வேண்டாம்,சொத்தும் வேண்டாம்" என உதறித்தள்ளிவிட்டு கதாநாயகனின் ஏழை வீட்டுக்கு  வந்து விடுகிறார் கதாநாயகி.
பணத்தை கரெக்ட் பண்றதுக்காக பணகாரப்பெண்ணை கரெக்ட் பண்ணிய கதாநாயகனுக்கு இது பெரும் அதிர்ச்சியை தருகிறது.உன்னை காதலிச்சதே பணத்துக்காகதான்..பணமில்லாத நீ வேண்டாம் என கதாநாயகியை நிராகரிக்கும் கதாநாயகன் பின் கதாநாயகியின் காதலை எவ்வாறு புரிந்து கொள்கிறான் என்பதே கதை.

நோ லாஜிக்..நகைச்சுவையாக நன்றாக நகர்த்தி இருக்கிறார்கள்..சூரி வருகிற இடமெல்லாம் சிரிப்பு பட்டாசு வெடிக்கிறது..முதல் பாதியின் வேகத்தை இரண்டாம் பாதியிலும் கூட்டி இருந்தால் படம் இன்னும் வேகமெடுத்திருக்கும்..ஒளிப்பதிவு அருமை..பாடல்கள் சுமார்ரகம்..பாடல்கள் இணைத்த இடங்கள்  சரியில்லை..மற்றபடி நல்லப்படம்..ரசிக்கலாம்..சிரிக்கலாம்.


Widget byLabStrike


2 comments:

  1. சுருக்கமாக இருந்தாலும் விமர்சனம் அருமை... பார்க்க வேண்டும்... நன்றி சார்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே..பாருங்கள்..

      Delete