Wednesday, September 5, 2012

அன்று வில்லன்..இன்று ஹீரோ..

தமிழகத்தில் பிறந்து ஆசிரியராக பணியாற்றி பின் இந்தியாவின் முதல் குடிமகனாம்  குடியரசுத் தரைவராகி ஆசிரியர்  பணிக்கு பெருமைத் தேடித் தந்த டாக்டர் ராதாகிருஷ்ணன்  பிறந்தநாள் (SEP 5 )ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக  கொண்டாடப்படுகிறது..
இந்நாளில் நமக்கு கல்வி போதித்து,சிந்தையில் சீர்திருத்தக் கருத்தை விதைத்து,சிற்றறிவை பேரறிவாக்கிய ஒவ்வொரு ஆசிரிய பெருமக்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
படிக்கிற காலத்தில் வில்லனாய் தெரிந்த என் ஆசிரியர்கள் இப்போது என் நினைவுகளில் கதாநாயகர்களாய்.
அந்த ஆசிரியர்கள் அன்று அடித்த அடிதான்,என்னை ஒவ்வொரு அடியாக முன்னோக்கி நகர வைத்தது,பல படிகளை தாண்டி பயணிக்க வைத்தது.
எனக்கு கல்வி போதித்த  கதாநாயகர்களுக்கு  என் நன்றியும்,வாழ்த்துகளையும் இந்நாளில் உரித்தாக்குகிறேன்..


Widget byLabStrike


2 comments:

  1. தன்னை மெழுகுவர்த்தியாக ஆக்கி வாழ்ந்த / வாழ்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்... நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. அறிவுபூர்வமான பதிவுகளால் பலரின் மனம் கவரும் தாங்களும் ஆசான்தான்..நன்றி நண்பரே

      Delete