Saturday, September 8, 2012

ஏழைவீடும் இயற்கை கூடும்!


விளக்கு  இல்லை எம்வீட்டில்
கூரைமேல் விண்மீன் கூட்டம்!
நீங்கள் வெளியில்  நனைவீர்கள்
மழை வீட்டிற்குள்ளே எம்மை நனைக்கும்!
நமஸ்காரம் செய்வீர்கள் வெளியில்
எம் வீடு தேடி சூரியன் வரும்!
காற்றுபுக  எம் வீட்டிற்குள்ளே
ஏனைய வாசல்கள்!
பூச்சிகளுக்கும்,புழுக்களுக்கும் கூட
எம் வீடு அதன் கூடு!
இயற்கைக்கும் இந்த ஏழை வீட்டுக்கும்தான்
எவ்வளவு உறவு!


Widget byLabStrike


4 comments:

  1. நல்ல வரிகள்...

    வரிகளில் ஆதங்கம், வேதனை... etc., சொல்லி விட்டீர்கள்...

    சந்தோசம் குடி கொண்டிருந்தால் போதும்...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி மாடி வீட்டில் ஓடி ஒளிகிறது..குடிசைக்குள் குடும்பம் நடத்துகிறது..
      மிக்க நன்றி நண்பரே..

      Delete
  2. அருமையான கவிதை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete