Sunday, September 9, 2012

படம் பார்க்கும் பாணப்பத்திரர் திருவிளையாடல்



திருவிளையாடல் படமும் சரி சிவாஜியின் பரிமாணமும் சரி இன்றுவரை யாராலும் மறக்க முடியாது.அந்தக் காலத்தில் திரை அரங்குகளை கலக்கி,பின்னாளில் திருவிழாக் காலங்களில் (தெருவோரத்தில் திரை கட்டுவார்களே) தெருவோரங்கங்களையும் கலக்கி எடுத்தப்படம்.பெரும்பாலான கோவில் திருவிழாக்களில் திருவிளையாடல் படம் போடும் நாளும் திருவிழாவாக கொண்டாடப்படும். என் சிறுவயது பருவத்தில் எனது கிராமத்தில் இதை நான் அனுபவித்திருக்கின்றேன்.என்னுள் என் ரத்தத்தில் ஊறிப்போன ஒருசிலப் படங்களில் திருவிளையாடலும் ஒன்று.அந்த பாதிப்புதான் இந்த உயிரோவியத்தை உருவாக்கவைத்தது.

அந்தக்காலத்தில் பானப்பத்திரர் நேராக பாட்டுப்பாட வந்தார்..விறகு விற்பவன் (சிவன்) பாடலைக் கேட்டார்..பயந்து ஓடினார்..இப்போதான் காலம் மாறிப்போச்சே..நவீன டிஜிட்டல் காலமாச்சே..அதான் தொலைக்காட்சியில் சிவன் பாடலைக் கேட்டே பானப்பத்திரரை ஆட வைத்திருக்கிறேன்..ஹீ..ஹீ.. ( கலைஞர் "முரசு" தொலைகாட்சிக்காக..நான் உருவாக்கிய உயிரோவியம்)


Widget byLabStrike


2 comments:

  1. நல்லா இருக்கு சார்... மிக்க நன்றி...

    (கலைஞர் "முரசு" தொலைகாட்சியில் எப்போது வரும் என்பதையும் சொல்லி இருக்கலாமே...)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி..இப்பொழுது முரசில் வந்துகொண்டிருக்கிறது நண்பரே

      Delete