Thursday, October 11, 2012

அமிதாப் என்கிற அசகாய சூரர்


அமிதாப் பச்சன் (பிறப்பு:அக்டோபர் 11, 1942)
உத்தரப்பிரதேசத்தில் அலகாபாத்தில் பிறந்தவர்.தந்தை டாக்டர் ஹரிவன்ஷ் ராய் பச்சன் இந்திக்கவிஞர்.தாய் தேஜி பச்சன் ஒரு சீக்கியப் பெண்மணி.
அமிதாப் ஹரிவன்ஷ் பச்சன் சுருக்கமாக அமிதாப் பச்சன்.இவர் 'பிக் பீ' என்றும் அழைக்கப்படுகிறார்.
அமிதாப் என்கிற பெயரிலேயே நடிக்க துவங்கி இருந்தாலும் நாளடைவில் பச்சன் என்பதே பார் புகழ் பெயரானது.
1970 களில் கோபக்கார வாலிபனாக சினிமாவில் சிவந்து பின்னர் இந்திய சினிமாவின் இணையற்ற துருவ நட்சத்திரம் ஆனார்.இந்தியாவின் சூப்பர்  ஸ்டாராக கொண்டாடப்பட்டார்.
பச்சன் பிரபல திரைப்பட நடிகை ஜெய பாதுரியை திருமணம் செய்து கொண்டார்.
பின்னணிப் பாடகர், படத்தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என இதரத் துறைகளிலும்  தன்னை அடையாளம் காட்டினார்.
பல பிலிம்பேர் விருதுகளும்,மூன்று தேசிய விருதுகளும் இன்னும் பற்பல விருதுகளையும் வென்று சினிமாவின் முடிசூடா மன்னனானவர். பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான பசீலனையில் அதிகமுறை பரிந்துரைக்கப்பட்ட பெருமை கொண்டவர்.இன்றும்  கதாநாயகனாக வலம் வருபவர்.  
அந்த மாபெரும் கலைஞனுக்கு இன்று பிறந்தநாள்..வாழ்க பல்லாண்டு.


Widget byLabStrike


2 comments: