Monday, October 15, 2012

டெங்கு கொலைகாரனிடமிருந்து தப்பிக்கும் வழிமுறைகள்


தமிழ்நாட்டின் தற்போதய நிலைமை சமீபத்தில் வந்த "நான் ஈ" படத்தைதான் ஞாபகப்படுத்துகிறது..வில்லனான சுதீப்பை விடமாட்டேன் என்கிற ரீதிரில் விரட்டி விரட்டி பதம் பார்க்குமே ஈ..அதைவிட மோசமாய் தமிழ்நாட்டு மக்களுக்கு வில்லனாகித்  தொலைத்திருக்கிறது கொசு.
தொலைக்காட்சிப் பெட்டியை  திறந்தாலே டெங்கு பீதி.மரணத்தின் எல்லைக்கே கொண்டு போகும் கொசுக்கடியின் கொடூரம்.கூட்டம் கூட்டமாய் டெங்கு பாதிப்பில் மருத்துவமனையில் மக்கள்.
மக்களை மாக்களாக பார்க்கின்ற  அரசு.தமிழ்நாட்டின் எல்லாப் புறமும் கொட்டியிருக்கும் குப்பைகள் அகற்றப்படாமல் கொசுப்பண்ணை.உயிரை மயிராய் கூட மதிக்காத அரசாங்கத்தின் அசுரத்தனம்.டெங்குவால் இறக்கின்றனர் என மருத்துவர்கள்  கருத்து சொன்னபோதும்  இல்லை தமிழ்நாட்டில் டெங்கு வரவே இல்லை என் பேட்டி தருகிற அரசியல்வாதி,அதிகாரிகளின் மெத்தனம்.நம்மை நாமே காத்துக் கொள்வது  தவிர வேறுவழியில்லை என்கிற நிலையில் நிர்கதியாக்கப்பட்டு மக்கள்..எனவே அதன் அறிகுறிகளையும்,வராமல் தடுப்பதற்கான வழி முறைகளையும் அறிந்து கொள்வது நமக்கு அவசியமாகிறது.

வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்:

வீட்டை சுற்றி தேக்கி வைக்கும் தண்ணீரிலோ அல்லது தேங்கும் தண்ணீரிலோ டெங்கு கொசு உருவாகிறது.இந்த கொசு பெரும்பாலும் நன்நீரிலேயே அதிகமாக உருவாகிறதாம்.பகலில் நம் உடலை பதம் பார்க்கும் கொசு பெரும்பாலும் இவ்வகையை சார்ந்ததாம்.வீட்டை சுற்றி தண்ணீர் தேக்கி வைப்பது,தேங்க விடுவது போன்றவை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்..கொசு உருவாக சாதகமான சூழல்  நம் புறச்சூழலில் இல்லாமல் பார்த்துக்கொள்ளுவது நல்லது.

டெங்கு காண  அறிகுறிகள்:

103 டிகிரிக்கு மேல் காய்ச்சல், கடும் தலைவலி, கண் வலி, குமட்டல், உடல் வலி, மூட்டு இணைப்புகளில் வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள் ..இவை அனைத்தும் இருந்தாலோ இவையில் ஏதேனும் ஒன்று இருந்தாலோக்கூட தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப் பெறுவது நல்லது.இரத்தப் பரிசோனை செய்து தெளிவு பெறுவது இன்னும் சிறந்தது.


Widget byLabStrike


6 comments:

  1. அவசியமாக தெரிந்து வைத்து இருக்க வேண்டிய தகவல்கள்.....பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...

    நன்றி...

    ReplyDelete
  3. அருமையான தகவல்கள்.
    நன்றி

    ReplyDelete