ஒருகாலத்தில் ஆறு பேக் வச்ச ஹீரோவ பாக்கணும்னா அது ஹாலிவுட்ல தான்கிற
நிலைமை,நம்ம ஹீரோக்கள் எல்லாம் அப்போ பொதிமூட்டை லெவல வயிறு
வச்சிருப்பாங்க.அப்புறம் அந்த போதை கொஞ்சம் கொஞ்சமா ஊடுருவி நம்ம பாலிவுட்ல
வந்து நின்னுச்சு..இப்போ அது கோலிவுட் ,டோலிவுட்நு எதையும் விட்டுவைக்கல.
எல்லா ஹீரோக்களுக்கும் இப்போ ஒரே கனவு சிக்ஸ் பேக் தான்..அதுவே ஹைப்புக்கான அலட்டல் மேட்டராகவும் இப்போ ஆகி விட்டது.
எது எப்படியோ ஹீரோக்கள் சிக்ஸ் பேக் வைக்க ஆரம்பிச்ச வுடனே இளைஞர்கள் மத்தியிலும் அந்தக் கனவு பரவலாகி ஜிம்,பிட்னஸ் சென்டர் எல்லாம் இப்போ கூட்டம் நிரம்பி வழியும் இடமாகி விட்டது..பெரும்பான்மையானோருக்கு பிட்னஸ் பற்றிய விழிப்புணர்வும்,உடலழகை,ஆரோக்கியத்தை பற்றிய கருத்தாழமும் மேலோங்கி விட்டது.
நண்பர் ஒருவர் சொன்னார் அவருடைய ஏரியாவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாவது வீட் பிரட் தானாம் ,அந்த ஏரியாவில் பேச்சலர்ஸ் அதிகமாக இருக்கிறார்களாம். வொர்க் அவுட் பண்ணுகிறவர்கள் அதிகமாக வீட் பிரட் பயன்படுத்துகிறார்கள் என்றும் வீட் பிரட் வந்தவுடனேயே விற்றுவிடுகிறது என்றும் அந்த சூப்பர் மார்க்கெட் காரர் சொன்னதாக குறிப்பிட்டார்.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது சிக்ஸ் பேக்ஸ் போதை நடிகர்களுக்கு வருவது நமக்கு பயன்தரும் விசயமாத்தான் இருக்கிறது. போதை நல்லதுன்னு ஏத்துக்க வேண்டியதுதான்..
ம்ம்ம்ம்ம்ம்ம்....நடிகர்கள் எது பண்ணினாலும் அதை மற்றவர்கள் பின்பற்றுவதும் போதைதான்...என்ன செய்வது!?
ReplyDeleteஆமாம் நண்பரே..உண்மைதான்
Deleteநல்ல போதை...
ReplyDeleteஆமாம் நண்பரே
Delete