Thursday, October 25, 2012

சின்மயியை தூண்டியது யார்?


சின்மயி-கடந்த சில நாட்களாக ஊடகங்களில் விவாதிக்கப்படும் சர்ச்சை நாயகி.விவாதம்,விதண்டாவாதம் என்பது பொதுவாக நான்கு பேர் கூடுமிடத்தில் நிகழும் இயல்பான ஒன்று.அளவோடு இருக்கும் போது அது வாதமாகவும்,அளவுக்கு மீறும் போது அது சண்டையாகக் கூட முடியக்கூடும்.விவாதம்,விதண்டாவாதம் ஆகும் போது அதில் ஒரு நபர் விலகி போனாலே பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி ஆகிவிடும்..அந்த பிரச்சினை அதோடு முடிந்தும்விடும்.

ஆனால் சின்மயி விவாகரத்தில் என்ன நடந்திருக்கிறது?
எதிர் தரப்பினர் ட்விடினார்கள்..திட்டினார்கள்..ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார்கள் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்..சரி சாதாரணமாக பேசும்போது யாரும் திட்டவோ,ஆபாசமாக பேசவோ வாய்ப்பில்லை..அப்படியானால் அவர்கள் அப்படி பேச எழுத தூண்டியது யார்?
எதைப் பற்றி பேசினால் எளிதில் ஒருவன் உணர்ச்சியால் உந்தப் படுவான்,எதை எழுதினால் ஒருவன் கோவப்படுவான் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

ஒன்று அவன் குடும்பத்தைப் பற்றி கீழ்த்தரமாக பேசி இருக்க வேண்டும்,இல்லையேல் அவனை,அவன்  சார்ந்தவர்களை,அவன் நேசிக்கும் ஒன்றைப் பற்றி அசிங்கமாக பேசியிருக்க வேண்டும்.
அப்படியானால் சின்மயிக்கு எதிராக அவர்கள்  அசிங்கமாக பேச அவசியம் என்ன?அவர்கள் சின்மையிக்கு தொழில்ரீதியான போட்டியாளர்களா?இல்லை பரம்பரை பகையாளிகளா?எதுவும் இல்லை..ஜஸ்ட் லைக் தட் ட்விட்டர்ஸ்..
அப்படியிருக்க அவர்கள் ஏன்  சின்மயியை அசிங்கமாக பேசினார்கள்,எழுதினார்கள்?

ஒரு இனத்தை தமிழ் மீனவனைப் பற்றி ஏளனமாக தன் சாதித் திமிரில் சின்மயி பேசி இருக்கிறார்.நீங்கள் மீனைக் கொல்கிறீர்கள்,சிங்களன் மீனவனைக் கொல்கிறான் அவ்வளவுதானென்று.அப்புறம் ரிசர்வேசனைப் பற்றியும் பேசி இருக்கிறார்.உணர்வுள்ள எவன் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்வான்.
ராஜபக்சேவை அசிங்கமாக திட்டியதில்லையா நாம்..ஏன் திட்டினோம் அவன் நம்மினத்தை அழித்தான், என்கிற உணர்வுதானே,அதுதான் சின்மயி விவகாரத்திலும் நடந்தேறி இருக்கிறது.

இப்போ கூறுங்கள் அவர்களை தூண்டியது யார்??
அதுதான் அந்த சிலரை கோபம் கொள்ள செய்திருக்கிறது,விவாதம் வரம்பு மீறவே வார்த்தை அவர்களிடத்தில் தடித்திருக்கிறது. இது இருத்தரப்பின் தவறுதானே ..அப்படி இருக்க அவர்கள் மட்டும் செய்ததாக சின்மயி கூறுவது எப்படி ஏற்புடையதாகும்.
சின்மயி ஒதுங்கி வெளியே வந்திருந்தால் இத்தனை பிரச்சினை இல்லை..இல்லை ஏதோ பேச்சுக்காக பேசி விட்டேன் என மன்னிப்பாவது கேட்டிருக்கலாம்..அது அத்தோடு முடிந்திருக்கும்.

அவருக்கு உள்ள பின்புலத்தை தன் சாதி பலத்தை வைத்து அவர் தரப்பில் குற்றம் இல்லாதது போன்று ஒரு மாய வளையத்தை உண்டு செய்து நான் பெண்,ஆபாசமாக பேசுகிறார்கள் என்கிற போர்வையில் ஒருவரை  உள்ளே தள்ளி மலிவான  விளம்பரம் தேடி இருக்கிறார்.இதனால் மலிந்து போனது சின்மயியின் புகழ்தானே தவிர,தமிழனும் அல்ல,தமிழினமும் அல்ல,தமிழ் மீனவனும் அல்ல.


Widget byLabStrike


19 comments:

 1. நீங்கள் குறிப்பிடுவதும் சரி. ராஜன் சின்மயியை ஆபாச வார்த்தையால் திட்டியதாக கூறுகிறார்கள். ஆனால் வேறு சிலர் திட்டியதட்கான ஆதாரம் உண்டு. ஆனால் ராஜன் திட்டிய ஆதாரம் இல்லை.

  ReplyDelete
 2. சின்மயியின் மீனவர்களுக்கு எதிராக கூறிய கருத்து
  http://goo.gl/5GW5U

  ReplyDelete
 3. உங்களது விளக்கங்கள் சரி... இன்னும் சிறிது நாட்களில் உண்மை மேலும் தெரியும்...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. பார்ப்போம் நண்பரே..உண்மை வருமா??இல்லை திரும்பவும் பொய் வெல்லுமா என்று..

   Delete
 4. ஒரு திறமைக்குள்ளேயும் ஒரு அசிங்கம் இருக்கின்றது என்பதுக்கு சின்மயி ஒரு உதாரணம்

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. சின்மயி பாட்டு பாடுற பொம்பளையா ......

  நான் அணு உலைக்கு எதிரா போரடுரங்களோ நினச்சிடன் ?

  ReplyDelete
 7. இன்று பல பிரபலங்கள் தங்களது சுய ரூபத்தை சமுக வலைத்தளங்களில் ( கொ)(கா)ட்டித் தீர்த்து விடுகின்றார்கள். பொது மேடையில் அவர் இந்த மாதிரியான கருத்துக்களை தெரிவித்து இருப்பாரே யானால் சின்மயி இத்தனை காலம் சேர்த்து வைத்த பெயர், புகழ் அழிந்து போயிருக்கும்...ஆனால் தனது சமுக வலைத்தளத்தில் குறிப்பிட்ட ஒருவருடன் பேசி இருக்கின்றார். அந்த எதிராளி இதனை வெளியிட்டு கருத்து கேட்டிருக்கலாம், அதை விடுத்து வன்மனம் கொண்டு பாலியல் விசயத்தில் ஈடுபடாமல் இருந்திருக்கலாம். அவர் செய்ததும் தவறுதான்...ஆனால் அந்த தவறை செய்யத் தூண்டிய சின்மயி அவர்கள் செய்ததும் தவறுதான்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நண்பரே,இருதரப்பும் தவறு செய்தனர் ஆனால் ஒருதரப்பு மட்டும் தண்டனை அனுபவிப்பது எவ்விதத்தில் நியாயம்..

   Delete

 8. சரி, இப்பொழுது கேள்வி என்னவெனில் "அந்த ஹசந்த விஜேநாயக என்னும் சிங்கள கார்டுனிஸ்ட் நாயிற்கும், ராஜன் லீக்ஸ் அன்ட் கோவிற்கும் என்ன வித்தியாசம்?". அவனாவது ஒரு கார்டூன் படத்துடன் நின்று விட்டான்/ அல்லது நிறுத்தப்பட்டு விட்டான். ஆனால் இவர்கள் மீண்டும் மீண்டும் தமிழக முதல்வரை, ஒரு மாநிலத்தின் முதல் பெண்மணியை, அவர்களது தாயினும் வயதில் மூத்தவராக இருக்க கூடிய ஒரு பெண்மணியை மிகவும் வக்கிரத்தனமாக, மிகவும் ஆபசாமாக , அருவருப்பாக, தரக்குறைவாக ட்வீட்டி உள்ளார்களே. இதற்கு காரணம் என்ன? அவனாவது துவேஷ இனவெறி பிடித்தவன், தமிழர்களையே இழிவாக எண்ணுபவன். ஆனால் பச்சை தமிழர்களாகிய, தமிழ் நாட்டில் வாழும் இவர்கள் தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக இவ்வாறு ஆணாதிக்க ஆபாச கருத்துகளை வெளியிட்டதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? இவர்களும் அந்த நாய்களின் கூடாரத்தை சேர்ந்தவர்களோ? . தான் ஒரு ஆண், தான் ஒரு பெண்ணை பற்றி, அவர் நாட்டின் முதல்வராகவே இருந்தாலும் என்ன வேண்டுமானாலும், எவ்வளவு ஆபாசமாக வேண்டுமானாலும் கூறலாம் என்று இவர்களை எண்ண வைத்த காரணி என்ன? இதுதான் நீங்கள் கூறும் கருத்து சுதந்திரமோ? பதிவர்களே, டிவிட்டர்களே?

  ReplyDelete
  Replies
  1. நண்பரே..பொதுவாழ்க்கைக்கு வந்தவர்களை விமர்சிப்பது என்பது இயல்புதான் ,அதற்காக தரம் தாழ்ந்து தகாத வார்த்தைகளால் எழுதியிருக்க கூடாது..அது கண்டிக்கத்தக்கதுதான்.அதனை ஆணாதிக்க சிந்தனை என்று எடுத்துக்கொள்ள இயலாது..கலைஞர் அவர்களையும்தான் ஒருசாரார் தகாத வார்த்தைகளால் விமர்சித்து எழுதுகிறார்கள்,எழுதியும் இருக்கிறார்கள்..அப்போ அது என்ன ஆணடிமைத்தனமா ??ஆண்,பெண் யாராக இருந்தாலும் பொதுவாக பொதுவெளிகளில் தகாத வார்த்தை கையாளப்படக் கூடாது என்று வேண்டுமானால் சொல்லுங்கள் ஏற்கலாம்..பெண்கள் தவறு செய்தாலும் அதை ஒரு ஆண் கண்டித்தால் அதை ஆணாதிக்கம் என்ற போர்வையில் மூடி மறைப்பது சாயம் பூசிய நரியின் நிலைதான்.
   சின்மயி செய்த தவறு இப்போ மறைக்கப்பட்டு அந்த ஆண்கள் மட்டுமே தகாத வார்த்தைகள் பேசி இருக்கிறார்கள் என்பது போல் ஏமாற்று வேலை செய்து சாயம் பூசி இருப்பது நகைப்புக்குரியது.ஒரு இனத்தை தவறாக பேசிய சின்மயி அவர்கள் செய்த தவறை விட பெரிய தேச விரோத செயல் செய்திருக்கிறார் என்பதை உணருங்கள்..இருதரப்பும் கண்டனத்துக்குரியவர்கள்..ஒருதரப்பு தண்டனையும்,இன்னொரு தரப்பு வெற்றி களிப்பும் பெறுவது அரசியல் சித்து விளையாட்டு.சின்மயி செய்த தவறை சுட்டிக்காட்டினால் ஆணாதிக்கம் என்று சொல்லி அவரை காப்பாற்ற முயல்வது சிறு பிள்ளைத்தனம்.

   Delete
  2. இந்த கைதுகளில் ஜெயா கருணா விசயங்களை இழுத்து கோர்த்து விடும் காரணம் என்னவோ?அப்படியான ஆபாசங்கள் தவறே..ஆனால் இன்று அதற்க்கு குடைபிடிப்பதன் காரணம் என்ன?அந்த கார்டூனிஸ்ட் பற்றி அன்று வாய் திறக்காத மக்கள் இன்று துடிப்பது என்ன?கருணா ,சோனியா வை பற்றி வராத கருத்துக்களா?என்னை கூட தாய் தந்தை வரை அசிங்கம் அசிங்கமாக திட்டி எழுதினாரகள்..

   முதிர்ச்சி இல்லை..ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாமல் பிரபலங்கள் பேசுவதும் அப்புறம் காவல்துறை கைது என்று நீலி கண்ணீர் விடவும் தேவைதானா?highயன்கார் அப்புறம் மறத்தமிழச்சியாக மாறும் போதே தெரிகிறது யோக்கியதை.

   மேலே கீழே வசனத்தோடு அறிவாக ஸ்மைலி போடும் போது இருந்த அறிவு மீனவர்,இடப்பங்கீடு விசயத்தில் இல்லாமல் போனது அதிசயமே....

   இப்போது நடைபெறுவது சின்மயி செய்வது தான் யார் தன பவர் என்ன என்று காட்டும் ஒரு ஈகோ பிரச்சினையே....

   டுவீட்டரில் மட்டுமில்லை பொதுவிலும் அசிங்கப்பட்டுவிட்டார் ஜின்னாத்தா(சரோஜா சாமான் நிக்காலோ மாதிரி இதுவும் ஒன்று )அவ்வளவே

   (ஜின்னாத்தாவுக்கும் சின்மயிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..இந்த வார்த்தைகள் அவருக்கு பொருந்தாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்..)

   இது என் தனிப்பட்ட கருத்து இதை வெளியிடும் படைப்பாளி இதற்க்கு எவ்விதத்திலும் பொறுப்பில்லை.

   Delete