Thursday, October 4, 2012

சினிமாவை ஆட்டி வைத்த சக்ரவர்த்திகள்


காலையில் தொலைக்காட்சியில் எதேச்சையாக அந்தப்பாடலை  காண நேர்ந்தது.நேர்த்தியான நடனம்,மனம் மயக்குகிற உடலசைவு என பிண்ணி பெடலெடுத்திருந்தார் ஆனந்தபாபு.நன்றாக நினைவிருக்கிறது ,என் சிறு வயதில் என்னுடன் படிக்கும் நண்பர்கள் எல்லோரும் சொல்வார்கள், டிஸ்கோ டான்ஸ் என்றாலே அது  ஆனந்தபாபுதான்னு.பிரபுதேவா வருவதற்கு முன் நடனத்தால் மக்களின் மனதில் நங்கூரம் பாய்ச்சியவர் ஆனந்தபாபுதான்.அவர் அப்பாவிடமிருந்து வந்த ஜீன் சும்மா இருக்குமா??நடனத்தில் நாகேசே பட்டையை கிளப்பக்கூடியவர்..புலி பாயும்போது புலிக்குட்டி சும்மா இருக்குமா??பாடும் வானம்பாடி படத்தில்  எப்படி பாய்ந்திருக்கிறது பாருங்கள்..

 

இந்தப்பாடல்,படம் ஹிந்தியில் வந்த டிஸ்கோ டான்சர் என்கிற படத்தை தழுவி எடுக்கப்பட்டது.டிஸ்கோ டான்சரில் மிதுன் சக்ரபோர்ட்டி பட்டையை கிளப்பி இருக்கிறார்..பாய்ந்து பாய்ந்து நடனம் ஆடுகிறார்..பார்வையாலே எல்லோரையும் வசீகரிக்கிறார்.அந்த வசீகரத்தில்தான் அகிலம் அன்று கட்டுண்டு இருந்திருக்கிறது..நாடு கடந்தும் ரஷ்யாவில் சக்கைப் போடு போட்டதாம் இந்தப் பாடலும்,படமும்..ரஷ்யாவில் ரசிகர் கூட்டம் கட்டுக்கடங்காமல் மிதுனை கண்டு களித்ததாம்.நம் கலாசாரத்தை சினிமா வழியாக கலாசார தூதராக அன்று அகிலமெங்கும் கொண்டு சென்ற பெருமை மிதுனுக்கு என்றும் உண்டு..கண்டுகளியுங்கள் கலாசார தூதனின் கட்டுக்கடங்கா ஆட்டத்தை.. 



Widget byLabStrike


4 comments:

  1. ஆனந்தபாபு - டிஸ்கோ டான்ஸ் அவ்வளவு பேமஸ்...

    இப்போது அவர் நிலை (உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்) வருத்தப்பட வைக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே..முதலில் நடனம் ஆடினார் ரசித்தோம்..பேமஸா இருந்தார்.. இப்போதும் வேறொன்றை போட்டு ஆடுகிறார்..பீல்ட் அவுட் ஆகிட்டார்..

      Delete
  2. அரசனும் ஆண்டியாவான் என்ற கருத்துக்கு காரணம் போதையும்,உதாரணத்திற்கு ஆனந்த் பாபுவும்,தினந்தோறும் நாக ராஜன் என்று சினிமா துறையில் ஏகப்பட்ட உதாரணங்கள்.

    அந்த பாட்டு....சொக்க வைக்கும் இசையும் நடனமும் குரலும்....NO WAY..EVER GREEN.

    ReplyDelete