Friday, October 5, 2012

(இதயத்)திருடர்கள் ஜாக்கிரதை



தெருவோர பல்லிளிப்பில்
தெரியாமல் தொலைகிறது இதயம்!
கைகளைக்கீறி  காதல் சுவடு எழுத
கருணையில் தொலைகிறது இதயம்!
நீயின்றி வாழ்தல் ஆகாது வார்த்தையில்
கசிந்து தொலைகிறது இதயம்!
அலைபேசி அழைப்பிலே
அகமகிழ்ந்து தொலைகிறது இதயம்!
காதல் தோல்வி ஆகும் போது
காயம்பட்டு தொலைகிறது இதயம்!
திருட்டு போகிறது என தெரிந்தும்
விரும்பித் தொலைக்கிறது இதயம் !


Widget byLabStrike


7 comments:

  1. ஆமாங்க... எதற்கும் கொஞ்சம் கவனமாய் இருங்க...!

    ReplyDelete
  2. அருமை!
    பெரியவர் சென்னை பித்தன் ஒரு முறை ஒரு ஹைக்கூ எழுதியிருந்தார்
    “தொலைந்து போயிற்று
    அதுவும் ஆனந்தமே
    இதயம்”
    அவருக்கு அவர் இளமைக்கால நினைவுகள்.உங்களுக்கு இப்போதைய அனுபவங்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா..மிக்க நன்றி நண்பரே தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்..மீண்டும் வருக

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி அய்யா..மீண்டும் வருக

      Delete