Monday, October 29, 2012

கக்கூஸில் இருந்து கடவுளை நினைக்காதே- எள்ளிநகையாடும் M .R.ராதா

M .R.ராதா  என்றவுடன் நம் நினைவுகளில் நிழலாடுவது அவரது தைரியமும் யார்க்கும் அஞ்சாத எகத்தாளம் மிக்க பேச்சும் தான்.தனக்கே  உண்டான தனித்துவ பாணியில் சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை பிற்போக்குத்தனங்களை அசால்டாக சொல்லிப்போகும் அவரது ஸ்டைல் அவருக்கு மட்டுமே உரியது.பல படங்களில்  தன் பாணியில் பட்டையை கிளப்பி உள்ள M .R.ராதா வின் ரத்தக்கண்ணீரை யாராலும்  மறந்து விட முடியாது.சமுதாயத்துக்கு சாட்டையடி கொடுத்த அது போன்றோர் இன்னோர் படத்தை யாராலும் எடுத்துவிடவும் முடியாது.அப்படியே எடுத்தாலும் அவரைப்போல நடிக்க இனி ஆளேது.
அப்படிப்பட்ட M .R.ராதா சினிமா,நாடகம் மட்டுமில்லாமல்  பொது மேடைகளிலும் முற்போக்கு கருத்துகளை விதைத்தார் என்பது யாவரும் அறிந்ததுதான்.பெரியாரின் தீவிரத் தொண்டனான M .R.ராதா சிந்தனைகளில் பிற்போக்குதனமிகுந்த சிறியோர்களை திட்டி முற்போக்கு எண்ணங்களை  விதைப்பதை  தன் கடமையாக கொண்டிருந்தார்.பாருங்கள் தன் பணியை மலேசியாவிலும் தொடர்ந்திருக்கிறார். சினிமா,அரசியல்,சமுதாயம் என அவர் கலந்து கட்டி கலாய்த்து இருப்பதை  கேளுங்கள்..



Widget byLabStrike


7 comments:

  1. நேற்றுதான் இந்த உரையை you tube ல் கேட்டேன் இன்று ஞாபக படுத்தி விட்டீர்கள்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா...நல்லது நண்பரே

      Delete
  2. இவரைப்பற்றிய ஒரு பாடல் விரைவில் என் பகிர்வில் வரும்...

    ReplyDelete
    Replies
    1. எதிர்ப்பார்க்கிறேன் நண்பரே

      Delete
  3. இந்த ஆடியோ ஒரு வருடத்திற்கும் முன் நான் கேட்டேன் அன்பரே... அவருக்கே உதிய பாணியின், நகைச்சுவை கலந்த சமுக எண்ணங்களின் சாட்டையடி.. இவரால் மட்டுமே இப்படி பேசமுடியும்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே..அவருக்கு இணை அவரே..

      Delete
  4. நல்லவேளை இரண்டு வருடங்களுக்கு முன் எம் .ஆர் .ராதாவும், எம் ஜி.ஆர் ரும் பேசுவதைப்போல ஆபாசமாக ஒளி நகலை பார்க்க நேர்த்தது அதுவோ என்று எண்ணிவிட்டேன் .

    ReplyDelete