Sunday, November 25, 2012

பரதேசி ட்ரைலர் பாலாவின் உலகப்படம்


பரதேசி தலைப்பு வைக்கின்றபோதே பலரின் பார்வையை திசை திருப்பியது.இது போன்ற ஒரு தலைப்பை பாலா என்கிற புரட்சி இயக்குனரால்தான் வைக்க இயலும் என்று பலரும் பேசினர் ..
படம் ஆரம்பித்தது பரதேசி யார்??எப்படி வருவான்  ??என பலரும் எதிர்ப்பார்க்கலாயினர்.அதர்வாவின் ஹேர் கட்டும்  முகவெட்டும் வரலாற்றின் பழைய பக்கத்தை திருப்பி எழுதியது..பலரும் திகைத்து நின்றனர்..பாலாவின் இன்னொரு பக்கம் படத்தில் இருக்கும் என்றனர்.
புகைப்படங்கள் வெளிவரத் தொடங்கின..அது பேசாத மொழியில் ஏதோ ஒரு கதையை பேசத் தொடங்கி இருந்தது..போஸ்டர் கண்டதும்  புரிந்து கொண்டேன்,அழைப்பிதழ்  கண்டேன் இது பாலாவின் பக்கம் மட்டுமல்ல  தமிழ் சினிமாவின் ஏன் இந்திய சினிமாவின் வரலாறு போற்றும் மகாகாவியமாக விளங்கும் என புரிகிறது.
இந்திய  சினிமாவின் பரிணாம வளர்ச்சியில் ஒரு மைல் கல் என்று இன்று வெளிவந்த ட்ரைலர் மெய்ப்பித்துவிட்டது..எதிர்ப்பார்த்திருக்கிறேன் உங்களைப் போன்றே நானும்..



Widget byLabStrike


1 comment:

  1. உண்மை தான்... ஆவலை அதிகரிக்க செய்கிறது...

    ReplyDelete