Tuesday, November 20, 2012

சோனா உனக்கு இது தேவைதானா?



முன்பு ஒரு சமயத்தில் நடிகை குஷ்பூ கற்பு பற்றிய விசயத்தில்,ஏதேதோ பேசி அதற்கு மகளிர் சங்கம்,மற்ற ஏனைய இயக்கங்களின் எதிர்ப்பு கிளம்பி அப்புறம் அது  அமுங்கிப்போனது எல்லோருக்கும் தெரியும்..
அப்புறம் highயங்கார்  அம்மா ஒருத்தங்க தன் ஆணவ பேச்சால் ஹை  லெவல இருந்து  லோ வானது எல்லோரும் அறிந்தது..

இப்போ நடிகை சோனா "ஆண்கள் எல்லோரும் டிஸ்யூ பேப்பர் மாதிரி..அவர்களோடு சேர்ந்து வாழ்வது முட்டாள்தனமானது" என்று ஒரு பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டி சர்ச்சையாகி இருக்கிறது..பெண்கள் அல்லாமல் ஆண்களைப் பற்றி பேசி இருப்பதால் இது பெரிதாக வெளியில் பேசப்படவில்லை..ஒரு இயக்கம் மட்டுமே சோனாவின் வீட்டை முற்றுகை இட்டதாக தகவல்.

சரி இவர்களுக்கு எந்த ரீதியாக இப்படியெல்லாம் வாய் கொழுப்பாக பேசத் தோன்றுகிறது என்று யோசித்துப் பார்த்தோமானால் பெண்கள் என்கிற பாதுகாப்பு வளையமா என்றால் அதுவும் இல்லை,சாராசரி பெண்கள் இவ்வாறெல்லாம் பேசுவதில்லை..அப்போ பிரபலம் என்கிற திமிரா என்றால் ஆமாம் அதுதான் என்கிற மாதிரிதான் இவர்களின் செயல்கள் சொல்கிறது.
நாம் பிரபலம் நாம் சொல்வது சராசரி  மக்களுக்கு வேதவாக்கு நாம் சொல்வதை அவர்கள் ஏற்க வேண்டும் அல்லது ஏற்பார்கள் என்று எண்ணுகிறார்கள்,இல்லையேல் எதிர்வினை கிளம்பினாலும் அதை தனக்கு பப்ளிசிட்டியாக பயன்படுத்தி கொள்ளலாம் என்கிறத் திமிர்.

தான் இருக்கிற துறையில் தனக்கான முகவரி அழிகிற போது,தன்னை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று பிரபலங்கள் எண்ணுகிற போதெல்லாம் இது மாதிரி இழிவான பப்ளிசிட்டியை பயன்படுத்த முயல்கிறார்கள்.இதன்  மூலம் மக்களுக்கு தாம் வாழ்வதை நினைவுறுத்துகிறார்கள்.அவர்கள் பேச்சே அவர்களுக்கு எதிர்வினை ஆகும் போது வாங்கிக் கட்டி கொள்கிறார்கள், இருந்த மரியாதையும் இழந்து விடுகிறார்கள்..கிணற்று தவளைகளுக்கு தெரிவதில்லை கிணற்றை  தாண்டியும் உலகம் இருக்கிறதென்று..


Widget byLabStrike


2 comments:

  1. நன்றாக சொன்னீர்கள்...

    'டப்பு'க்கேற்ற பேச்சு...

    ReplyDelete
  2. அப்பேட்டியை விகடனில் படித்தபோது, அவர் மேல் களிவிரக்கமேற்பட்டதுடன் , இவர் நல்லதொரு மன நலமருத்துவரைச் சந்திக்காவிடில் தற்கொலை செய்த நடிகைகள் பட்டியலில் விரைவில் வருவாரெனத் தோன்றியது.

    ReplyDelete