Friday, November 29, 2013

வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதநேயம்



கருப்பு வெள்ளை என்று
தோலில்
நிறம்பிரித்து

என் நாடு ,வீடென்று
உலகத்தை
நிறம்பிரித்து 

சாதி,மதமென்று
சமூகத்தில்
நிறம்பிரித்து

வெறியோடு வாழ்கின்ற
வீணர்கூட்டம்
நிறைந்தும் கூட


மாண்டுபோகாமல்
இந்த மண் இன்னும் வாழ்கிறதென்றால்
உன்னைப்போல ஒட்டிக்கொண்டிருக்கும்
கொஞ்ச நஞ்ச மனிதநேயத்தில்தான்  !



Widget byLabStrike


8 comments:

  1. படமும் வரிகளும் அருமை... நெகிழ வைத்தன...

    ReplyDelete
  2. வணக்கம்
    கவிதையின் வரிகளும் படங்களும்... மிக அருமை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. விளம்பரம் வேண்டா நிஜமான மனிதநேயம்

    ReplyDelete