Sunday, November 25, 2012

"தீ"க்குப்பின்னால் மிருகம்


தீப் பற்றி எரிகிற
இடமெல்லாம் தேடிப்பார்க்கிறேன்
ஒரு கறுத்த குழந்தை
அழுது கொண்டிருக்கிறது
இழந்த பொருளோடு வாழ்க்கை தொலைந்ததாய்
இடிந்துபோனவன்  இருக்கிறான்
வறுமைக்கு வாக்கப் பட்டவள்
மண் வாரிவிட்டு சாபமிடுகிறாள்
துக்கம் விசாரிப்பதாய்
கரைவேட்டி கூட்டம் ஆயிரம் இருக்கிறது
தீயை  அணைக்கவும்
தீண்டாமை இன்றி மனிதனாய் அணைக்கவும்
தீ வைத்தவனிடத்தில்  மனிதம் இல்லை
பற்றவைத்தவனிடத்தில்  பக்குவம் இல்லை
அங்கே புரையோடிப்போன மிருகம் காண்கிறேன்
சா "தீ" வெறி அதன் மனத்தில் கனன்று கொண்டே இருக்கிறது!

Widget byLabStrike


2 comments:

  1. இந்த தீ தான் இப்போது அதிகம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கறது... எண்ணெய் ஊற்ற பல பேர்.... கொடுமை...

    ReplyDelete
  2. தீண்டாமை இன்றி மனிதனாய் அணைக்கவும்......

    islam irukirathu brts

    ReplyDelete