Wednesday, November 28, 2012

புவனேஸ்வரியும் துணை நிற்கும் சாதிசங்கமும்..

பூனைக் கண் புவனேஸ்வரி என்றாலே ஒரு ஈர்ப்பும் மயக்கமும் எல்லோருக்கும் உண்டு..கவர்ச்சிக்கரமான கட்டமைப்பு உடலும்,கிறங்கடிக்கும் பார்வையும் அவரது தனித்துவம்.

சமீப நாட்களில் சர்ச்சையும் அவருடைய தனித்துவமாகிவிட்டது..முன்பு அவர் விபச்சார வழக்கில் சிக்கியது எல்லோரும் அறிந்ததுதான்..இப்போ சினிமா பார்க்க போன இடத்தில் பக்கத்தில் நின்றிருந்த காரை தாக்கியதுடன், காவல் துறையினரையும் ஆள் வைத்து தாக்கி இருக்கிறாராம்  புவனேஸ்வரி.இந்த தைரியம் ஒரு சாதாரண கவர்ச்சி நடிகைக்கு எங்கிருந்து வந்தது..வருகிறது..

முன்பொருமுறை விபசார வழக்கில் உள்ளே போய் வெளியே வந்த புவனேஸ்வரி தன்  பாதுகாப்புக்கு தன சாதி அடையாளத்தையும்,சாதி அமைப்பையும் இழுத்துக்கொண்டார்..அதை அந்த சாதி அமைப்பும் எதிர்க்கவில்லை,ஆதரித்துக் கொண்டது..

ஒரு தவறை செய்து பின் தன்னை  காப்பாற்றிக் கொள்ள முயலும் போது சாதியை பாதுகாப்புக்கு இழுத்து விட்டுக் கொள்ளும் மனோபாவம் சினிமாக்காரர்களிடம் அதிகம் உள்ளது.. அதுதான் அப்போ புவனேஸ்வரியிடமும் வெளிப்பட்டது.. அது மாதிரி கீழ்த்தர செயல்களுக்கு சாதி சமூக அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்காததால் அதை தன் பக்கபலமாக சினிமாக்காரர்கள் பயன்படுத்த முயல்கிறார்கள்..

இப்போ நடந்த செயலுக்கும் கூட தன் சாதி அமைப்பை புவனேஸ்வரி  துணைக்கு  அழைக்கலாம்..அதற்கு சாதிசங்கமும் துணை நிற்கலாம்..

என்ன செய்ய ஒரே  சாதி என்றால் சாக்கடையையும் சந்தனம் என்று கூறிக்கொள்ள சமூகம் முற்படுகிறது .. சாதியின் பெயரால் சமுதாயம்
நாறிக்கொண்டே இருக்கிறது..


Widget byLabStrike


5 comments:

  1. //சாதியின் பெயரால் சமுதாயம்
    நாறிக்கொண்டே இருக்கிறது..//

    உண்மைதான்.அருமையாச் சொன்னீங்க!

    ReplyDelete
  2. தேவர் அடியால் ஜாதியா

    ReplyDelete