Monday, August 5, 2013

உலக அதிசயங்கள் ஒன்றுகூடியிருக்கிறது நிர்வாணமாய்..



கனத்த மனது இளகுகிறது
பீத்தோவன் இசை புறவெளி தாண்டி 
காதுகளை வருடுகிறது!
வண்ணங்களை தெளித்தபடி பிக்காசோ
எங்கும் நிறைந்திருக்கிறான்!
சேக்ஸ்பியர் இலக்கியம் எழுத
இடம்தேடி என்னருகில் வந்துவிட்டான்!
ஹிட்லர் துப்பாக்கியை தூர எரிந்துவிட்டு
சமாதானப்புறாவை  கையிலேந்தி இருக்கிறான்!
அங்கம் தெரியும் உடையில்
ஆடிக்கொண்டிருக்கிறாள் மன்றோ!
உலக அதிசயங்கள் ஒன்றுகூடி
ஓரிடத்தில் சங்கமித்திருக்கிறது!
யாருமற்ற தனிமையில்
நிர்வாணமாகியிருகிறேன் நான்!



Widget byLabStrike


7 comments:

  1. நச்சென்ற சில வரிகள்.ஆழம் பார்த்தால் வலிக்கின்றது..மனது!!!

    ReplyDelete
  2. அன்பின் படைப்பாளி - படமும் கவிதையும் நன்று - உலக அதிசயங்கள் ஒன்று கூடுகின்றன - ஆனால் தனிமையில் இவள் நிர்வாணமாக .... சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  3. நிர்வாணத்தின் நிபுணத்தினை கலைஞன் மட்டுமே அறிவான். அருமையான கவிதை நண்பரே.

    ReplyDelete