Friday, November 23, 2012

LIFE OF PI - மரணப் போராட்டம்


யன்  மார்டெல் என்கிற நவலாசியரின் புகழ்பெற்ற நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம்.இயக்குனர் ஆங் லீ..இவர் ஏற்கனவே ஏனைய திரைப்படங்கள் செய்திருந்தாலும் அனைவரும் அறிந்த  HULK திரைப்படம் இவர் இயக்கியதுதான்.இவர் இயக்கிய Brokeback Mountain மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்ற படம்..

ஒரு இந்திய உயிரியல் பூங்கா பராமரிப்பாளனின்  படு சுட்டியான மகனை மையம் கொண்டு விலங்குகளோடு  பிண்ணப்பட்டிருக்கும்  கதை.
ஒரு கப்பல் பயணத்தின் போது கப்பல் விபத்துக்குள்ளாக,அந்த பையன் ஒரு வரிக்குதிரை, ஒரு கழுதை புலி, ஒரு மனித குரங்கு மற்றும் ஒரு 450 பவுண்ட் எடை கொண்ட ரிச்சர்ட் பார்க்கர்   எனபெயரிடப்பட்ட வங்கப்புலி ஒரு படகில் தப்புகிறார்களாம்.


கடல் விபத்தில் தப்பி ஒரே படகில் பயணிக்கும்  ஒன்றுகொன்று எதிர் குணம் கொண்ட புலியும்,பையனுக்கும் இடையில் நடக்கும் போராட்டம்,கடல் நடுவில் நடக்கும் மரணப் போராட்டம்... என்ன ஆகிறார்கள்,அவர்களுக்குள் என்ன நடக்கிறது வெறி கொண்ட புலி வென்றதா??விவேகம் கொண்ட பையன் தப்பினானா?  என்பதே  கதை என்கிறார்கள்..
கேட்கவே சுவாரசியமாக  இருக்கிறது..இதுவே படத்தை பார்க்கும் ஆவலை அதிகமாக்கி விட்டது..சரி IMDb ரேட்டிங் பார்க்கலாம் என்று போனால் அங்கும் 8.2 கொடுத்திருக்கிறார்கள்..ஹ்ம்ம்..இந்த வார இறுதியை வங்கப்புலி ரிச்சர்ட் பார்க்கருடன் கழிக்க வேண்டியதுதான்..


இது படம் பார்க்கும் ஆவலில் எழுதியது,படம் பார்த்துவிட்டு வந்ததும் மீண்டும் ஒரு பதிவு இருக்கிறது..உங்கள விட மாட்டம்ல..


Widget byLabStrike


1 comment:

  1. ஆகா... அவ்வளவு தானா...? விரைவில் எழுதுங்க...

    ReplyDelete