Saturday, November 10, 2012

சரித்திர சாதனையில் "SKYFALL" வசூல்



"Skyfall " படத்தோடு ஐம்பது ஆண்டுகள் 23 படங்கள் என சரித்திரப் பின்னணியை செய்து சாதனை கொண்ட  "ஜேம்ஸ் பாண்ட்"  சீரிசுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் ஒரு மாபெரும் மரியாதை உண்டு.அதற்கு காரணம் அறிவியல் புரட்சியில் டெக்னாலஜியில் நாம் மாபெரும் மாற்றங்களைத் தொடும் முன்பே "ஜேம்ஸ் பாண்ட்" அந்த மாற்றங்களின் முன்மாதிரியாக திரையில் தோன்றுவார்..வாவ் இப்படியெல்லாம் நடக்குமா என நம் வாய்களை பிளக்க வைப்பார்..எல்லோரும் சிரமப்பட்டு செய்யும் செயல்களை அசால்ட்டாக செய்து முடிப்பார்.அதனால் அந்த கதாப்பாத்திரத்தின் ஸ்டைல்  மக்களுக்கு ஒரு ஈர்ப்பை உண்டு செய்திருந்தது.

அடுத்த "ஜேம்ஸ் பாண்ட்" படம் எப்போ வரும் என எல்லோரும் எதிர்ப்பார்க்கும்படி அந்த கதாப்பாத்திரத்தின் சாகசங்கள் அமைந்து போயின.இந்த ஆண்டோடு அந்த கதாப்பாத்திரம் ஆரம்பிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் பல நடிகர்கள் மாற்றம் என பரிணாம வளர்ச்சியை எட்டி இருந்தாலும் அதன் எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் இன்னும் ஈர்ப்பாகவே இருக்கிறது.


ஆனால் சமீபத்திய சில "ஜேம்ஸ் பாண்ட்"படங்கள் மக்களுக்கு திருப்பதியையும்,எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யாதவையாக அமைந்து விட்டன.அதற்கு காரணம் "ஜேம்ஸ் பாண்ட்"அல்லாத ஏனைய ஹாலிவுட்,இதர மொழி கதாநாயகர்கள் டெக்னாலஜியை தாங்கள் கைகளிலும் எடுத்துக்கொண்டார்கள்.சர்வ சாதாரணமாக சாகசம் செய்பவர்களாக எல்லோரும் தோன்ற ஆரம்பித்து விட்டார்கள்.இப்போ "ஜேம்ஸ் பாண்ட்" செய்யும்போதுதான் அந்த மாதிரி  சாகசங்களை பார்க்கவேண்டும் என்கிற நிலை இல்லாமல் ஆகிவிட்டது.


இருந்தாலும் அந்த "ஜேம்ஸ் பாண்ட்" என்கிற கதாபாத்திரத்தின் மீது மக்கள் கொண்டுள்ள மயக்கம் தீர்ந்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.அந்த கதாப்பாத்திரத்தின் மீது அளவற்ற கிறக்கம் இன்னும் சினிமா ரசிகர்களுக்கு இருந்துகொண்டுதான் இருக்கிறது.அதற்கு சமீபத்திய வசூல் சாதனையே சான்று.


இந்தியாவில் ரிலீஸ் ஆன ஹாலிவுட் படங்களிலேயே ஒரு வாரத்தில் இவ்வளவு பெரிய வசூலை எந்த ஒரு படமும் சாதித்ததில்லை என்கிற மாபெரும் சரித்திர சாதனையை "skyfall " படைத்துள்ளது.ஒரே வாரத்தில் ரூ.34.5 கோடி வசூலாம்.

 
ஜேம்ஸ்பாண்ட் படங்களில் skyfall வசூல்தான் இந்தியாவில் சாதனை வசூலாகி உள்ளது. இதற்கு முன்னர் 2008ஆம் ஆண்டு வெளியான குவாண்டம் ஆஃப் சொலேஸ், கேசினோ ராயல்(2006) ஆகியவை வசூல் சாதனை படைத்துள்ளது. இதனை தற்போது ஸ்கைஃபால் விஞ்சியுள்ளது என்கிறார்கள்..
இதமூலம் படத்தில் மட்டுமல்ல "பாண்ட்" 
"ஜேம்ஸ் பாண்ட்" தன்னை வசூலிலும் எப்போதும் வெற்றியாளராகவே நிரூபித்து வருகிறார் என்பது நிரூபணமாகிறது.


Widget byLabStrike


2 comments:

  1. விவரங்களுக்கு நன்றி நண்பரே...

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நண்பரே,

    தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
    http://www.tamilkalanchiyam.com

    - தமிழ் களஞ்சியம்

    ReplyDelete